புற்றுநோயுடன் போராடக்கூடிய நனோ டேமினேட்டர்கள்

342
திரவ உலோகத்தினைக் கொண்டு புற்றுநோய்க் கலங்களுடன் போராடக்கூடிய நனோ டேமினேட்டர்களை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இதனை சாதாரண மாத்திரைகளை வழங்குவது போன்று புற்றுநோய்க் கலங்களை நோக்கி செலுத்தி அவற்றுடன் போராடி அழிவடையச் செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி North Carolina’s State பல்கலைக்கழகம் மற்றும் பயோ மெடிக்கல் பொறியலாளரான Zhen Gu என்பவர் தெரிவிக்கையில் “இது வைத்தியர்களுக்கு மிகவும் இலகுவான முறையாக காணப்படும் எனவும், புற்றுநோய்க் கட்டிகளை விரைவாக கண்டறிவதற்கும் உதவும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த டேர்மினேட்டர்கள் 100 நனோ மீற்றர்கள் விட்டம் கொண்ட திரவத்துளிகள் போன்ற வடிவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE