ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டு மானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந் தித்து நாட்டின் எதிர்கால கல் வித் திட்டங்கள் குறித்து நேற்றுமுன்தினம் கலந்துரையாடி னார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய் யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அது பிள்ளை களுக்கு மன உளைச்சல் என் கிறார்கள்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டு மானால். பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூடவேண்டும்.
பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் சட்ட ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியா கவோ மட்டும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் நாட்டில் நெருக் கடிகள் ஏற்படலாம்.
இவ்வாறான நிலைமைக ளைக் குறைக்கும் வகையில் பொதுப் பரீட்சை முறையின் கீழ் பரீட்சையை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு பொதுவான கல்வி முறை இருக்க வேண் டும்.
முடிவெடுக்கும் பொறி முறையை வலுப்படுத்த முயற் சிக்கிறோம்.
இது அரசியல்வாதியோ. அமைச்சரோ அல்லது செய லாளரோ தனிப்பட்ட முடிவு களை எடுப்பதற்காக அல்ல. தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் பொறி முறையை அமைக்க முயற்சிக் கிறோம் என அவர் தெரிவித் தார்.