பல்வேறுபட்ட மனித நடவடிக்கைகளால் பூகோளத்தின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதனால் பல எதிர்விளைவுகள் ஏற்படும் எனவும் தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது அனைவருக்கும் ஆறுதல் தரும் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது அமெரிக்காவின் அரச ஆய்வு நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முன்னரை விடவும் இந்த வருடம் வெப்ப அதிகரிப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதற்காக கடந்த 15 வருடகாலமாக சேகரிப்பட்ட வெப்ப அதிகரிப்பு தரவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
இதேவேளை வெப்ப அதிகரிப்பானது நீண்ட காலத்திற்கு தொடராது எனவும், அது விரைவில் முடிவுக்கு வரலாம் எனவும் குறித்த ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். |