பூமியின் காந்தப்புலம் எவ்வாறு மாறுகிறது? விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

297

earth-magfield

புது ஆய்வுகளின் படி பூமியின் காந்தப்புலம் எங்கனம் மாறுகின்றது என விரிவாக தெரியவருகிறது.

இக்காந்தப்புலமானது கடுமையான சூரிய வீச்சிலிருந்தும், அண்டைவெளிக் கதிர்ப்புக்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு போர்வையாக உள்ளது.

இது புவியின் சில இடங்களில் பலவீனமானதாகவும், சில இடங்களில் பலமானதாகவும் காணப்படுகிறது.

என்னதான் கண்ணுக்கு புலப்படாவிடினும், அதில் ஏற்படும் மாற்றங்கள் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது.

தரவுகளின்படி இப்புலமானது முன்னையதிலும் 10 மடங்கு வேகமாக பலவீனமடைந்து வருகிறது.

அத்துடன் ஒவ்வொரு தசாப்தமும் அதன் பலம் 5 வீதத்தால் குறைவடைந்து வருகிறது.

கடந்த 2013 இல் ESA அனுப்பிய செயற்கை கோளானது(Swarm) புவியின் மைய, மேலோடு, சமுத்திரங்கள், அயன் மண்டலம், மற்றும் காந்தப்புலங்களிலிருந்து வரும் சமிக்ஞைfள் மூலம் புவியின் காந்தப்புலத்ததை அளவிடுகிறது.

இந்த தரவுகளை பயன்படுத்தி முதன்முதலாக காந்தப்புலம் எவ்வாறு மாறுகின்றது, எந்தப்பகுதிகளில் பலம், பலவீனமடைகிறது, அம்மாற்றங்களுக்கான காரணம் யாதாக இருக்கலாம் என்பது தொடர்பான தெளிவான வரைபடம் ஒன்றை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இதைவிட முக்கியமாக இம்மாற்றங்கள் எவ்வளவு விரைவாக ஏற்படுகிறது என்பதையும் கண்காணித்துள்ளனர்.

இதன்படி 1999 தொடக்கம் வட அமெரிக்க பகுதிகளில் காந்தப்புலமானது 3.5 வீதம் பலவீனமடைந்திருப்பதையும், ஆசிய பகுதிகளில் இது 2 வீதத்தால் பலமடைந்திருப்பதையும் அவதானிக்க முடிந்திருக்கிறது.

அத்துடன் தென் அமெரிக்கப் பகுதிகளில் கடந்த 7 வருடங்களில் அது மேற்கு பக்கமாக நகர்ந்திருப்பதையும் அவதானித்துள்ளனர்.

இதனால் 2 வீதம் வரையில் பலவீனம் அடைந்திருக்கிறது. ஏன் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன?காந்தப்புலமானது புவியின் வெளிக்கோறையிலுள்ள ( 3000 km ஆழத்தில்) உருகிய இரும்பு குழம்பால் உருவாக்கப்படுகிறது என்றே நம்பப்படுகிறது.

இத்திரவம் மின்னை தேற்றுவிக்கும் சைக்கிள் டைனமோவை போல் தொழிற்படுகிறதெனவும், இதனால் புவியைச் சுற்றி காந்தப்புலம் உருவாவதாகவும் கருதப்படுகிறது.

இக்குழம்பில் ஏற்படும் மாற்மே காந்தப்புல மாற்றங்களுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

புவியின் திரவ அயன்களையும், காந்தப்புல மாற்றங்களையும் வரைபடப்படுத்துவது இதுவே முதன்முறை.

SHARE