பூமியுடன் மோத வரும் கிரகம்! ஒக்டோபரில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள்!!

180

 

நிபரு என்ற கிரகம் ஒன்று பல்வேறு சந்தர்ப்பங்கள் தோன்றி மறைவதாக கடந்த காலங்களில் பல்வேறு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த கிரகம் தொடர்பில் நாசா நிறுவனம் உட்பட இந்த கருத்து தொடர்பில் தலையிட்டிருந்தன. உலகின் பல நாடுகளில் ஒரே நேரத்தில் இரண்டு சூரியன்கள் தோன்றிய சந்தர்ப்பத்திலேயே இது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அந்த இரண்டில் ஒன்று சூரியன் எனவும் மற்றையது பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் கிரகம் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருந்தனர்.

எப்படியிருப்பினும் 2003ஆம் ஆண்டில் இருந்தே நாசா நிறுவனத்தினால் அந்த கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும், 2017ஆம் ஆண்டு தீர்மானமிக்க ஆண்டாக அமையும் என விண்வெளி ஆய்வாளரான டீ மெடே என்பவர் தனது புதிய புத்தகம் ஊடாக அறிவித்துள்ளார்.

இந்த வருடம் ஒக்டோபர் மாதம் நிபரு கிரகம் சூரியனை சுற்றி சென்று இரண்டு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் என அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அது மாத்திரமின்றி மேலும் 6 கிரகங்களை அதன் ஊடாகவே முன்னோக்கி பயணிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் பூமியில் தீர்மானமிக்க பல சம்பவங்கள் இடம்பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எப்படியிருப்பினும் நிபரு என்ற கிரகம் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என நாசா நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் அவ்வாறான கிரகம் ஒன்று வரும் என்றால் அதனை தடுக்க எந்தவிதமான முன்னாயத்தங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE