பூமியை கடக்கவிருக்கும் இராட்சத விண்கல்

319
கடந்த சில காலமாக விண்கற்கள் பூமியை அண்மித்த பாதையில் பயணிப்பது தொடர்பான பல செய்திகள் வெளியாகியிருந்ததுடன், அவை தொடர்பாக மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.இவ்வாறிருக்கையில் தற்போது மற்றுமொரு இராட்சத விண்கல் பூமியை அண்மித்து செல்லவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

30 மீற்றர்கள் அகலமான இந்த விண்கல் எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி அளவில் அது பூமியிலிருந்து 18,000 கிலோமீற்றர் தொலைவினூடாக நகர்ந்து செல்லலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தூரம் ஆனது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தின் இருபதில் ஒரு பங்கு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் பூமியில் உள்ள உயிரினங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் இதனை பூமியிலிருந்து பார்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE