பூமியை சுற்றி விண்வெளியில் பயணித்த முதல் அமெரிக்கரான ஜோன் க்ளேன் தனது 95 வது வயதில் காலமானார்.
இறக்கும் போது அவர் புற்றுநோய் மருத்துவமனையில் இருந்தார். எனினும் அவருக்கு ஏற்பட்ட நோய் பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
1962 ஆம் ஆண்டு அட்லஸ் ரொக்கட் மூலம் பூமியியை சுற்றி பயணம் செய்த ஜோன், வெற்றிகரமான திரும்பிய முதல் அமெரிக்கர் என்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
பின்னர், அவர் ஒக்கியோ பல்கலைக்கழகத்தில் விண்வெளி விஞ்ஞானத்துறை சம்பந்தமான நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்றினார். அத்துடன் அமெரிக்க செனட்டராகவும் பணியாற்றியுள்ளார்.
ஜோன் க்ளேன் மறைவு தொடர்பில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்ப் கவலை வெளியிட்டுள்ளார்.