பூமியை தாக்க வரும் விண்கல் பெரும் உயிரிழப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

296

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)

சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று பூமியை தாக்கும் என்றும் அதனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சூரியனை மையமாக வைத்து கோடிக்கணக்கான விண்கற்கள் நாம் வசிக்கும் இந்த பால்வீதியை சுற்றி வருகின்றன.

இவற்றில் ஒரு விண்கல் தான் Bennu என அழைக்கப்படும் ஆபத்தான விண்கல். இது சூரியனை மையமாக கொண்டு மணிக்கு சுமார் 63,000 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது.

கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை கூர்ந்து கண்காணிக்க Osiris-Rex என்ற விண்கலம் அனுப்பப்பட்டு தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமார் 500 மீற்றர் சுற்றளவு கொண்ட இந்த விண்கல் பூமிக்கு அருகில் ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கும் வந்து செல்லும்.

ஆனால், எதிர்வரும் 2135ம் ஆண்டில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே கடக்கும்போது, அந்த விண்கல் பூமி மீது மோத வாய்ப்புள்ளது என தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அசுர வேகத்தில் பூமி மீது மோதினால், 7 கி.மீ தூரத்திற்கு எரிமலை வாய் போல் துளை ஏற்படும் என்றும், சுமார் 500 கி.மீ தூரம் வரை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், உயிரிழப்புகளும் உண்டாகும் என Dante Lauretta என்ற விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது Bennu விண்கல்லை ஆய்வு செய்து வரும் Osiris-Rex 2023ம் ஆண்டு பூமிக்கு திரும்பும் என்றும், அதில் பதிவாகியுள்ள தகவல்களை ஆராய்ந்தால் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE