நாசா நிறுவனத்தின் புதிய விண்வெளி கண்காணிப்பு முறைமையில் பூமியை நோக்கி வரும் இராட்சத விண்கல் ஒன்று தென்பட்டுள்ளது.
இதனை அடுத்து எச்சரிக்கை விடுத்துள்ள நாசா நிறுவனம் பாரிய ஆபத்து இல்லை எனவும் அடுத்த சில மணி நேரங்களில் பூமியை அண்மித்து செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தென்பட்டுள்ள இவ் விண்கல் ஆனது 498,000 km தூரத்தில் தென்பட்டுள்ளது.
இத் தூரமானது பூமிக்கும், நிலவுக்கும் இடையிலுள்ள தூரத்தினைப் போன்று மூன்ற மடங்காகும்.
இதேவேளை ஹவாய் தீவில் இராட்சத தொலைகாட்டி ஒன்றினை நாசா நிறுவனம் அமைத்திருந்தது.
2016 UR36 எனும் குறித்த தொலைகாட்டியின் ஊடாக முதன் முதலாக அவதானிக்கப்பட்ட வான்பொருளாக இவ் விண்கல் காணப்படுகின்றது.
மேலும் குறித்த விண்கல் ஆனது 5 மீற்றர் அகலமும், 25 மீற்றர் நீளமும் உடையதாக இருப்பதாகவும் நாசா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.