பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கிரகம் – நாசாவால் கண்டுப்பிடிப்பு

119

 

பூமியை விட இரண்டு மடங்கு பெரிய புதிய கிரகத்தை நாசா கண்டுப்பிடித்துள்ளது. இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கிரகம்
சூரிய மண்டலத்தில் உள்ள வேறு கிரகங்களில் தண்ணீர் உள்ளதா? காற்று இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் அதிகமாக இருக்கிறதா என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் பூமியை போன்று இன்னொரு கிரகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் இந்த கிரகமானது இருகிறது. இங்கு நீர் நிறைந்து இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி என்ற இந்த கிரகத்தில் நீர் முலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கு முன் கண்டுப்பிடிக்கப்பட்ட நீர் மூலக்கூறு இருக்கும் கிரகங்களுடன் பார்க்கும் போது இது பூமியலி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE