பூர்ணா ஐஸ்வர்யா ராயோடு சேர்ந்து நடனமாடியதால் ரசிகர்கள் பூர்ணாவுக்கு முத்தமிட்டனர்.

360

 

சென்னை: துபாயில் ஐஸ்வர்யா ராயோடு சேர்ந்து நடனமாடினார் பூர்ணா.இதுபற்றி அவர் கூறியது:சமீபத்தில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நடனம் ஆட சென்றேன். அங்குபோன பிறகுதான் நான் பங்கேற்கும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்ளப்போகிறார் என்பது தெரிந்தது. அவர் வந்ததும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இப்படி ஒரு சந்திப்பு நடக்கும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. 

அவர் நடித்த படங்களின் பாடல்களை தொகுத்து ஆடினேன். என்னை பாராட்டிய அவர் ஒரு பாடலின்போது இருக்கையிலிருந்து எழுந்து வந்து என்னுடன் நடனம் ஆடினார். இதை மறக்க முடியாது. மேடையிலிருந்து நான் இறங்கி கீழே வந்ததும் அங்கு அமர்ந்திருந்த எனது நண்பர்கள் ஐஸ்வர்யா பிடித்த கை இதுதானே நானும் கொஞ்சம் பிடித்துக்கொள்கிறேன் என்று கையை பிடித்து குலுக்கினர். சில ரசிகர்கள் என் கையில் முத்தமிட்டனர். 

SHARE