இந்தியாவில் அடிக்கடி கற்பழிப்புகள் இடம் பெற்றுவவதை நாம் செய்திகள் ஊடாக அறிந்து வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் ஒரு கற்பழிப்பு நடைபெற்று வருகிறது என்று அதிரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பெண்களை கட்டாய பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியாத ஜீன்ஸ் ஒன்றை இந்தியப் பெண்கள், தயாரித்துள்ளார்கள். டீக்சா(21) மற்றும் அஞ்சலி (23) ஆகிய இரண்டு இளம் பெண்களே இந்த ஜீன்ஸை தயாரித்துள்ளார்கள். குறிப்பிட்ட ஜீன்ஸை தேவையற்ற விதத்தில் கழற்ற முற்பட்டால், அதனை உடனடியாக கழற்ற முடியாது. அத்தோடு அதில் உள்ள பட்டன் ஒன்றை அழுத்தினால், அது ஆபத்து சமிஞ்சைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பும் வகையில் இந்த ஜீன்ஸ் அமைந்துள்ளது.
இந்த வடிவமைப்பை பலர் வரவேற்றுள்ளார்கள். பொலிசார் பாவிக்கும் வாக்கிடோக்கியின் சிக்னலை பாவித்தே இது ஆபத்து சமிஞ்சைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு இது அனுப்புகிறது. இந்தவகையான ஜீன்ஸை தனியாகச் செல்லும், பெண்கள் பாவிப்பது நல்லது என்று கூறப்படுகிறது. இரவு வேளைகளில் மற்றும் தூர இடங்களுக்கு செல்லும் பெண்கள் இந்த ஜீன்ஸை நிச்சயம் அணிவார்கள் என்று எதிர்வு கூறப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தால் , எப்படி எல்லாம் பொருட்களை தயாரிக்க வேண்டி உள்ளது பார்த்தீர்களா ?