பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த இராணுவம், சரணடைந்தவர்களைக் கொன்ற இராணுவம், இன்று சிவில் சமூக செயல்பாடுகளை முடக்கி வருகின்றது.

459

 

வடக்கில் கிழக்கில் சட்டத்ததை கையில் எடுத்து சட்டவிரோத செயல்களை செய்கின்றது. இதை மூடிமறைக்க இனந்தெரியாத கும்பலாக தன்னை மாற்றி, அதை முன் நிறுத்துகின்றது. இலங்கையில் புலானாய்வு என்றால் இரகசியமாக கடத்துதல், கொல்லுதல்தான். அதன் அதிகாரம் மூலம் கப்பம், ஆள்கடத்தி பணம்பறித்தல், பாலியல் வன்புணாச்சி என அனைத்தையும் அதுவே அரங்கேற்றுகின்றது.
இந்தவகையில் குடாநாட்டின் இராணுவத் தளபதி – அரச அதிபர் – டக்கிளஸ் அடிப்படையாக கொண்ட மூவர் கும்பல், இதற்கு இன்று தலைமை தாங்குகின்றது. தமக்குள் அதிகாரப் போட்டியை நடத்தியபடி, ஒருவரை ஒருவர் சார்ந்தும் குழிபறித்தபடியும், அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்கின்றது.

army_vanni001

இனவழிப்பு செய்த இராணுவம், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த இராணுவம், சரணடைந்தவர்களைக் கொன்ற இராணுவம், இன்று சிவில் சமூக செயல்பாடுகளை முடக்கி வருகின்றது.
இனப்பிரச்சனைக்கு தீர்வை வழங்க மறுக்கும் அரசுக்கு எதிராக, மக்கள் தேர்தல் மூலம் வெளிப்படுத்தும் அவர்களது உணர்வை தடுக்க முனைகின்றது. மக்களை அச்சுறுத்தி, அவர்கள் தமக்கு எதிராக வாக்களிப்பதைத் தடுக்க முனைகின்றது அரசு. சர்வதேசரீதியாக தனிமைப்பட்டுள்ள ஆட்சியாளர்கள், தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு நிற்பதை மூடிமறைக்க முனைகின்றனர். இந்த அடிப்படையில் வன்முறையை அந்த மக்கள் மேல் ஏவுகின்றனர். மகிந்த பாசிசம், இன்று தேர்தல் ஜனநாயகத்தைக் கூட கண்டு அஞ்சுகின்றது. தன்னை தக்கவைக்கவும், தனிமைப்படுவதில் இருந்து தற்பாதுகாப்பைப் பெறவும், இராணுவ ஆட்சியை வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த வகையில் இலங்கையை இராணுவ ஆட்சியின் கீழ் ஆள்வதை நோக்கி, மகிந்த குடும்பம் சிவில் சமூக கட்டமைப்புக்குள் இராணுவத்தை இலங்கை தளுவிய அளவில் திணிக்கின்றது. பாராளுமன்ற போலி ஜனநாயகத்தின் சடங்குகளைக் கூட சகிக்க முடியாத எல்லைக்குள், மகிந்தாவின் பாசிச சிந்தனை அதைக் கடித்துக் குதறுகின்றது.
உலகளவில் தனிமைப்பட்டுள்ள இலங்கை ஆட்சியாளர்கள், உள்நாட்டில் தம்மை தக்கவைக்க இராணுவ ஆட்சி வடிவத்தை குறிப்பாக்கி, அதைப் பலப்படுத்தி வருகின்றனர். உலகநாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்படும் தற்காப்பு சார்ந்த ஒன்றாக, இடதுசாரியத்தின் பெயரில் ஒரு கூட்டம் இன்று கூறுகின்றது. இதை நாளை ஏகாதிபத்திய எதிர்ப்பால் ஏற்பட்ட தவறு, குற்றம் என்று கூறத் தயங்காது. இதையொத்த வகையில் புலிகளின் பாசிச அரசியலை மறுத்து, தனிமைப்படுத்தப்பட்ட புலியின் தற்காப்பு சார்ந்த தவறு குற்றம் என்று கூறுகின்ற இடதுசாரி நவீன புரட்டை இன்று நாம் எதிர் கொள்கின்றோம்.
அரசியல் மூலங்களை மறுத்து, தற்காப்பு மற்றும் புறநிலைக் காரணங்களால் குற்றங்கள், தவறுகள் நிகழ்ந்ததாக கூறுகின்ற இடதுசாரிய அரசியல் புரட்டைக் கொண்ட பொது அரசியல் சூழலில், இந்த இராணுவமயமாக்கம் கூட ஆங்காங்கே நியாயப்படுத்தப்படுகின்றது. மக்களை இதற்கு எதிராக வழிகாட்ட, அரசியல் ரீதியாக புரியவைக்க இன்று யாரும் கிடையாது. தற்காப்பு மற்றும் புறநிலைக் காரணத்தால் ஏற்படும் இராணுவமயமாக்கமும், அதனால் ஏற்படும் தவறுகள், குற்றங்கள் என்று கூறுகின்ற அரசியல் பித்தலாட்டங்களைக் கடந்து, அரசியல் உண்மைகளில் இருந்து இதை இனங்காண வேண்டும்.
சர்வதேசரீதியான தனிமைப்படுதல், அதன் அரசியல் மூலங்களாலானது. இது புலிக்கும் பொருந்தும், அரசுக்கும் பொருந்தும்;. இலங்கை அரசு இனவழிப்பை யுத்தத்தை நடத்தி முடித்த நிலையில், பாரிய போர்க்குற்றங்களை யுத்தத்தின் பின்னும் தொடர்ந்து திட்டமிட்டு செய்தது. தொடர்ந்து வடக்கு கிழக்கு மக்களை இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருப்பதன் மூலம், அதை நாட்டின் பொது அரசியல் வழியாக மாற்றிவருகின்றது. தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வை வழங்காது தொடர்ந்து ஓடுக்கியாள முனைகின்றது.
இதன் பின்னணியில் வடக்கு கிழக்கில் மக்கள் மூச்சுக் கூட விட முடியாதுள்ளது. எங்கும் கண்காணிப்பு. மக்கள் தெரிவு செய்த உறுப்பினர்கள் கூட, சுயாதீனமாக மக்களுடன் உரையாட முடியாது. போலி ஜனநாயகம் சர்ர்ந்த தேர்தல் கூட்டங்கள் கூட, இராணுவத்தின் வன்முறைக்குள் இன்று சிதறடிக்கப்படுகின்றது.
இதற்கான தீர்வு தான் என்ன? தமிழ் சிங்கள மக்கள் இதற்கு எதிராக ஒன்றுபடுவதற்கான போராட்டம் தான், இதை அரசியல் ரீதியாக எதிர்கொண்டு தீர்வுகாணும். இதுவல்லாத அனைத்து வழியும், கடந்தகாலத்தில் தோல்விபெற்ற வரலாறாகவே நீண்டு கிடக்கின்றது.- பி.இரயாகர
சிறிலங்கா இராணுவ மயமாக்கப்படுவது இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சிறிலங்காவில் ஒருவர் இருப்பாராயின் மோதல் இன்னமும் தொடர்ந்து கொண்டு தானிருப்பதாகத் தான் ஒருவர் உணருவார்.

Col-Vasanthan
போருக்குப் பிந்தைய சிறிலங்காவில் முழுநாட்டிலும் இராணுவ மயமாக்கம் என்பது இன்னமும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தால் அவர்களைக் ஹீரோக்களாகப் பார்க்கும்,சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தெற்கில் இது பெரியளவான முக்கியத்தைப் பெறவில்லை. ஆனால் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கிலும் கிழக்கிலும் அவர்களை ஒடுக்குமுறையாளர்களாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள்.
போர் பெருமளவில் நடைபெற்ற வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் பிரசன்னம் என்பது பெரும் இடர்களை ஏற்படுத்துவது.
மக்களுடைய நாளாந்த வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அரச படையினரின் தலையீடு இருந்து கொண்டே இருக்கிறது.
புணியாற்றும் இராணுவத்தினர் குறித்து சரியான புள்ளிவிபரங்கள் எதுவும் எங்கும் nவிப்படையாக் கிடைக்கக் கூடியதாக இல்லை. மிகவும் இடையூறை ஏற்படுத்தும் எங்கும் வியாபித்துள்ள இராணுவத்தனர் தொடர்பான அப்புள்ளிவிபரங்கள் எதுவும் எங்கும் கிஜடைப்பதாக இல்லை. அவை ஆய்வுப் பரப்புக்கு அப்பாலானவையாகத் தான் இருக்கின்றன.
ஆயுதப்படையினரின் உறுப்பினர்கள் எங்கும் வியாபித்திருக்கிறார்கள். மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக போரில் தமது கணவனை இழந்த பெண்கள் மிகுந்த அச்சம் கொண்டவர்களாக உள்ளனர்.
இராணுவத்தின் மிக மோசமான இடையூறு என்னவென்றால் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் தலையிடுவது தான். யாழ்ப்பாணத்திற்குப் போகும் வழியில் நானும் எனது நண்பரும் கோப்பி குடிப்பதற்காக றோட்டோரத்தில் இருந்த ஒரு தேநீர்க்கடையில் நிறுத்தினோம்.
அக்கடையில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் எங்களுக்குத் தேநீர் பரிமாறினார். அங்கிருந்த வீட்டுக்குத் தேவையான சாமான்கள் விற்கும் பல்வேறு கடைகளிலும்; இராணுவத்தினரே பணியாற்றினர். இராணுவத்தினர் சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றுவது குறித்து நான் ஏற்கெனவே படித்திருந்தேன். இது உண்மையில் அபத்தமானது. போர் முடிந்த விட்டிருக்கிறது. தமிழ் மக்கள் ஏற்கெனவே தமது கௌரவத்தை இழந்திருக்கிறார்கள். அத்தோடு இராணுவ ஆக்கிரமிக்குட்பட்ட பிரதேசங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த ஜுலையில் வடக்கு கிழக்கில் இடம் பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் மக்கள் எவ்வளவு நிம்மதியோ சந்தோசமோ இன்றி வாழ்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாட்டின் ஏனைய பாகங்களில் வெற்றி பெற்றது. ஆனால் வடக்கு கிழக்கிலிருந்து மிகச் சொற்பமான ஆதரவையே அதனால் பெற முடிந்திருந்தது.
அரசாங்கம் வடக்கு கிழக்கில் புனருத்தாரணம் மற்றுமு; அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. உண்pமை என்னவென்றால் இந்த மக்கள் அரசாங்கத்தின் இந்த அபிவிருத்தி மாதிரிகளைப் புறக்கணிக்கிறார்கள். அந்த மக்களுக்கு இப்போது அவசியமானது ஒரு அரசியற் தீர்வு.
தவிர இறுதியாக இன்னொரு விடயமும் உள்ளது. இந்த நீண்ட நெடிய யுத்தத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டிய கடப்பாடும் ராஜபக்ச அரசாங்கத்துக்கு இருக்கிறது. வேலையற்ற இந்த நிலைமை குற்றங்களுக்கும் சமூக அமைதியின்மைக்கும் வழிகோலி விடுகிறது. ஆனால் இந்த அரசாங்கம் அவை பற்றிச் சிந்திப்பதாயில்லை.
துரதிர்ஷ்டவசமாக இராணுவ மயமாக்கல் என்பது தற்போதைய உலகளாவிய அரசியல் பொருளாதார நிலைமைகளின் கீழ் மிகப் பொருந்தி வருவதாக உள்ளது. அமெரிக்கா பிரித்தானிய போன்ற மேற்கத்தைய நாடுகள் இலங்கை இராணுவமயமாகி வருவதையிட்டு அதிகம் கவலை கொண்டதாக இல்லை. இறுதிப் போரில் இடம் பெற்ற போர்க்குற்றங்களையே அன்றி மனிதாயத்திற்கு எதிரான நடவடிக்கைகளையோ கண்டு கொள்ளாததைப் போலவே இதையும் அவை கண்டு கொள்ளவில்லை.
சர்வதேச விசாரணையைக் கோரும் சர்வதேச சமூகத்தின் இந்த இரட்டை நிலை வெளிப்படையானது. சுர்வதேச விசாரணையைக் கோருவதென்பது உண்மையில் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு நெம்புகோலாகப் பாவிப்பதென்பது தான். மறுபுறத்தின் இலங்கையுடனான இராணுவ உறவை வலுப்படுத்த அமெரிக்காவுக்குப் பென்ரகன் கொடுத்து வரும் அழுத்தம் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று.
சுpறிலங்காவின் இந்தத் தேவையற்ற இராணுவமயமாக்கம் என்பது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மனித உரிமை மீறல் அமைப்புக்களுக்கு ஒரு செய்தி. ஆனால் அதில் அவை இன்னமும் போதியளவு கவனம் கொண்டதாக இல்லை. அங்குள்ள பல முக்கியமான விடயங்கள் எங்களது கவனத்திற்குரியவை.

mulli_8509_6முதலாவது, பெரும்பாலான ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்துகின்றது. இரண்டாவது, மனித உரிமைப் பணிகளை முன்னெடுக்க அங்கு போதியளவு வாய்ப்பு இல்லை என்பது. மனித உரிமைப் பணியாளர்களில் பலர் இராணுவ மயமாக்கலைப் பற்றிக் கதைப்பது தேவையற்ற அபாயத்தை விளைவிக்கும் என்று அஞ்சுகிறார்கள்..மக்களும் அச்சத்துடன் இருக்கிறார்கள். இறுதியான ஒரு விடயம் என்னவென்றால் புவியியலரசியல் காரணமாக பலர் சிறிலங்காவிற்கு ஆயுதங்களை விற்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது தான்.
ஐரோப்பிய யூனியன் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால் மகிந்த ராஜபக்ச பதவியேற்ற 2005இற்குப் பின்னர் அதன் பல உறுப்பு நாடுகள் சிறிலங்காவிற்கு ஆயுதம் விற்பதில் முன்னணியில் இருந்து வந்துள்ளன.
ஆனால் சீனாவினால் இலங்கைக்கு இத்தகைய பிரச்சினைகள் இல்லை. கடந்த பல தசாப்தங்களாக இலங்கைக்கு அதிகளவு ஆயுதங்களை விற்பனை செய்து வரும் நாடு சீனா. இதற்காக சீனா நிபந்தனை எதுவுமற்ற கடனை இலங்கைக்கு வழங்கத் தயாராக இருக்கிறது.
இதேவேளை அமெரிக்க அரசாங்கமும் போரின் போது தேவையான ஆயுதங்களை இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பல ஆயுத விற்பனை முகவர்கள் எதிர்காலத்தில் இன்னும் பல ஆயுத விற்பனை ஒப்பந்தங்களை இலங்கையுடன் செய்வதற்காகக் காத்திருக்கிறார்கள்.
இவ்வாறான பல காரணங்களால் சிறிலங்கா இராணுவ மயமாக்கலைக் குறைப்பதோ சிறிலங்கா இராணுவச் செலவினத்தைக் குறைப்பதோ என்பது எதிர்காலத்தில் சாத்தியமற்றதொன்றாகவே தெரிகிறது.
கலைப் பண்பாட்டு அழிப்பும் பண்பாட்டு ஆதிக்கமும்
கலை பண்பாடு பாரம்பரிய அழிப்புகள் குறித்தும் விரிவான தகவல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக படையினரால் கைப்பற்றப்பட்ட அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளின் பெயர்கள் வீதிகளின் பெயர்கள் சிங்கள மொழிப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. கலாசாரப் பொருள்கள் களவாடப்பட்டு அல்லது அழிக்கப்படுகின்றமை சுட்டி; காட்டப்பட்டது. புத்த கோவில்கள் கட்டப்படுவதோடு இந்து ஆலையங்கள் உடைக்கப்படுகின்றமையும் கவனத்த்தில் கொண்டு வரப்பட்டது.
உ) போர்க் குற்ற நடவடிக்கைகள்:‐
1) குறிப்பிடத் தக்க அளவிலான போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
2) வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
3) சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கப்படாமை.
4) சனல் 4ன் குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதில் இல்லை.
ஊ)நில ஆக்கிரமிப்பு:‐
1) தோல்வி அடையும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் அசமந்தப் போக்கும்.
2) இன்னும் 80000 மக்கள் அகதி முகாம்களில் உள்ளனர்.
3) மீளக் குடியேற்றப்பட்டவர்களுக்கு முறையான உதவிகள் வழங்கப்படாமை.
4) இன்னும் மீளக் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்கள்.
5) மீன்பிடித் தடைகள்.
6) உயர்பாதுகாப்பு வலையங்கள்

இந்த இடத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம், முல்லைத் தீவின் செல்வபுரம், திருமுறிகண்டிப் பிரதேசங்கள் அடங்கிய 2000 ஏக்கர் வளமான நிலத்தை இராணுவத் தேவைகளுக்கு என அரசாங்கம் கையகப்படுத்தி உள்ளமை கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
திருகோணமலையின் சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலைய அமைப்பு என்ற போர்வையில் 4000 ஏக்கர் மக்களின் வளமான காணிகள் அபகரிக்கப்பட்டமை கவனத்தில் கொண்டு வரப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பிமலைப் பிரதேசம், அம்பாறையில் முஸ்லீம்களின் காணிகள் என்பன அரசால் கையகப்படுத்தப்பட்டமை கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வடகிழக்கில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதில் தொடரும் கட்டுப்பாடுகள், மற்றும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்விடங்கள் உயர் பாதுகாப்பு வலையங்களாக தொடர்ந்தும் பேணப்படுகின்றமை என்பனவும் கவனத்தில் கொண்டு வரப்பட்டது.
எ) தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை:‐
கிருஸாந்தி குமாரசாமி முதல் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் வரை.
இந்த இடத்தில் அண்மையில் கிளிநொச்சி விஸ்வமடுவில் இரு பெண்கள் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை சுட்டிக் காட்டப்பட்டது.
இது முழுமையாகப் பொய் எனவும் அண்மையிலேயே தான் இலங்கை சென்று திரும்பியதாகவும் அங்கு நிலைமைகள் மிக உன்னதமாக இருப்பதாகவும் டக்ளஸ் விக்கிரமரட்ண வாதிட்டார். அதற்குப் பதில் அளித்த குருபரன் அவ்வாறாயின் இலங்கையின் பத்திரிகைகள் கூறியது பொய்யா எனக் கேள்வி எழுப்ப பல ஊடகங்கள் பொய்யையே எழுதுகின்றன என வாதிட்டார். அவ்வாறாயின் இலங்கை அரசாங்கத்தின் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களை விளக்க மறியலில் வைக்கச் சொல்லி உள்ளதே நீதிமன்றமும் பொய்யா என குருபரன் கேள்வி எழுப்ப டக்ளஸ் விக்கிரமரட்ண மௌனமானார்.
ஏ) தமிழர் பிரதேசங்கள் இராணுவமயமாதல்
1) பெரும்பான்மை மக்களின் அரசாங்கம்
2) காலனித்துவத்திற்கு பின்னரான காலத்தில் இருந்து இன்று வரை சிங்கள அரசாங்கங்கள் சிங்கள பௌத்த அடையாளத்தையே கொண்டிருந்தன.
3) சிறுபான்மை இனங்களுக்கு பாதுகாப்பையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் வழங்க என செய்யப்பட்ட அனைத்து சமரச முயற்சிகளும் இன்றுவரை தோல்வி அடைந்த வரலாற்றுப் படிப்பினை.
4) பெரும்பான்மை இனத்தவரின் அதிகாரங்களை பலப்படுத்துதல்
ஐ) இராணுவமயமாக்கம்:‐
1) வரவு செலவுத் திட்டத்தில் முன்னரை விட அதிக நிதி ஒதுக்கீடு.
2) சிங்கள மயப்படுத்தப்பட்ட அரசாங்கம்.
3) இராணுவ மயமாகும் வடக்கு கிழக்கு.
இந்த இடத்தில் வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் ஆளுனர் முதல் வடக்கு கிழக்கு மாவட்டங்கள் சிலவற்றின் அரசாங்க அதிபர்கள் வரை உயர் படை அதிகாரிகளே கடமை புரிவது புள்ளி விபரங்களுடன் விளக்கப்பட்டது.
இது குறித்து விவாதத்தில் ஈடுபட்ட டக்ளஸ் விக்கிரமரட்ண கிழக்கின் முதலமைச்சர் ஒரு தமிழரே எனக் குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த குருபரன் கிழக்கு மாகாண சபையின் விமலவீர திஸ்ஸநாயக்கா மாகாண சபையின் அதிகாரம் குறித்தும் மாகாண ஆளுனரின் அளவுக்கு மீறிய தலையீடு குறித்தும் தெரிவித்த கருத்து ஆதாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டதுடன் முதலமைச்சர் ஒரு டம்மி என்பது தெளிவுபடுத்தப்பட்டது. அண்மையில் முதலமைச்சர் செய்த சாரதி நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்டமை சுட்டிக் காட்டப்பட்டது.

a_bild-7_1இதேவேளை நீங்கள் அனைவரும் ஒரு தரப்பு புலிகள் சார்பில் பேச வந்திருக்கிறீர்கள் என டக்ளஸ் விக்கிரமரட்ண தெரிவித்த குற்றச் சாட்டுக்கு பதிலளித்த குருபரன் தமிழ் மக்களின் அல்லது சிறுபான்மையினரின் உரிமைகள் பிரச்சினைகள் குறித்து பேசுபவர்களை தயவு செய்து புலிகள் என முத்திரை குத்தாதீர்கள் எனத் தெரிவித்ததோடு, தான் புலிகளால் ஒருகிழமை தடுத்து வைக்கப்பட்டதனையும், பின்னர் 1990இல் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது அதனை வன்மையாக கண்டித்து தலைப்புச் செய்தியாக ஈழத்தின் தேசியத் தற்கொலை எனத் தான் பணியாற்றிய சரிநிகரே எழுதி இருந்ததனையும் சுட்டிக்காட்டினார். இதனால் சரிநிகர் பத்திரிகை வடக்கு கிழக்கில் தடைசெய்யப்பட்டதனையும் சுட்டிக் காட்டினார்.
இறுதியாக இலங்கைத் தூதரகத்தின் சார்பில் பதிலளித்த அதிகாரி குருபரன் மற்றும் இங்கு கலந்து கொண்டவர்கள் மிகைப்படுத்திக் கூறியுள்ளார்கள். பல பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளன. தொடருகின்றன. ஆனால் அவை அரசாங்கத்தால் தீர்க்கப்படுகின்றன என சுருக்கமாகப் பதிலளித்து தனது கருத்தை முடித்துக் கொண்டார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் இலங்கையின் இன்றைய நிலைவரம் தொடர்பாக சுனந்த தேசப்ரிய, எம்.சி.எம். இக்பால், நடராஜா குரபரன் ஆகியோர் முன்வைத்த கருத்துகளுக்கு முறையான பதில்கள் எதனையும் வழங்க முடியாது திண்டாடியமையை அங்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இலங்கை தமிழ் இராணுவக் குழுக்களுக்கு இந்தியா வழங்கி வந்த இராணுவப் பயிற்சியும்,ஆயுத உதவிகளும் இலங்கையில் இனமோதல் குறிப்பிடத்தக்களவு விரிவடையக் காரணமாகின. இந்தியா 1987 ஆம் ஆண்டு இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படையினை அனுப்பியதுடன், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தத்திலும் ஈடுபட்டு இறுதியில் 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலையும் செய்யப்பட்டார். இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு எல்லா சமூக மக்களுக்கும் சந்தேகத்தினை ஏற்படுத்தியதுடன், இது இந்தியா உள்நோக்கத்துடன் மேற்கொள்ளும் சதியாகவும் நோக்கப்பட்டது. அனேக சிங்கள மக்கள் இந்தியாவினை இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவானதொரு நாடாகக் கருதியதுடன், இந்தியா இலங்கையினைப் பலவீனப்படுத்தி இரண்டாகத் துண்டாட விரும்புவதாக நம்பினர். மறுபக்கத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை இந்தியா அழித்து தனது நலன்களைப் பாதுகாப்பதாக தமிழ் மக்கள் நம்பினர்.குறிப்பாக 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இந்தியா இதனையே செய்திருந்ததாகவும் நம்புகின்றனர். ஆயினும், யுத்தத்தின் பின்னரும் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்துவதன் நோக்கம் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
இந்தியாவின் முயற்சி
2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு பின்வரும் பிரதான விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவேயிருந்தது.யுத்தத்தினால் இடப்பெயர்விற்குள்ளாகியிருந்த தமிழ் பொதுமக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளைச் செய்வது.
சலுகை அடிப்படையிலான கடன்களை வழங்குவதுடன்,வட பகுதியில் மேற்கொள்ளப்படும் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவி செய்வது.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அதிகாரப்பகிர்வினூடாக இனமோதலுக்கான தீர்வினை பேச்சுவார்த்தை மூலம் முன்னெடுத்துச் செல்வதற்கு முயற்சிப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அழுத்தத்தினைப் பிரயோகித்து இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்விற்கு வர முயற்சித்தல்
இரு நாடுகளுக்கும் இடையில் பாரிய பொருளாதார உறவினை ஏற்படுத்த ஆர்வப்படுத்துதல்.
ஆயினும், இந்தியாவின் இம்முயற்சியில் மந்த நிலை காணப்பட்டதுடன், இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கூடாக அரசியல் தீர்வினைக் காண்பதற்கு இந்தியா பாரிய முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
மிகவும் காலம் தாழ்த்தி இந்தியா 2011 ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நிகழ்வதற்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியது.சுதந்திரத்தினையும்,அர்த்தமுள்ள ஐனநாயக நிறுவனங்களை மீளக் கட்டமைப்பதற்கும், மற்றும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றி பயனுள்ள அதிகாரப் பரவலாக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கக்கூடிய இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா பின்வரும் விடயங்களுக்கூடாக அழுத்தம் கொடுக்க எண்ணியது.
அபிவிருத்திக்காகவும், மனிதாபிமான உதவிக்காகவும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள் மத்திய அரசாங்கத்தின் அல்லது இராணுவத்தின் தலையீடின்றித் கிடைக்கக் கூடிய விதத்தில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ளுர் சிவில் நிர்வாக அதிகாரங்கள் மீள் கட்டமைக்கப்பட வேண்டும்.
வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்தாமல் நீண்ட காலமாகத் தாமதித்து வைத்தல்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் குறிப்பாக புனர்வாழ்வு நிலையங்களின் இடங்களையும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களையும் வெளியிடுதல் வேண்டும்.
தற்போது உயர்பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் காணிகளை விடுவிப்பதை விரிவுபடுத்த வேண்டும்.
அரசியல் செயற்பாட்டிற்கான நியாயமற்ற கட்டுப்பாடுகளையும், சர்வதேச மற்றும் உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டிற்கான நியாயமற்ற கட்டுப்பாடுகளையும் நீக்குதல் வேண்டும்.
யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகப் போகும் நிலையில் இலங்கை அரசாங்கம் வட மாகாணத்தில் ஆழமாக மேற்கொள்ளும் இராணுவமயமாக்கம் மற்றும் அரச குடியேற்றங்களால் தாம் ஓரம்கட்டப்படுவதாகவும் இன இணக்கப்பாடு என்பதனூடாகத் தாம் படிப்படியாக வலுவிழக்கச் செய்யப்படுவதாகவும் தமிழ் மக்கள் மனவேதனைப்படுகின்றார்கள். அத்துடன், யுத்தத்தின் இறுதி மாதங்களில் மிகவும் கொடுமையாகக் கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பான பொறுப்புக் கூறுதல் அல்லது புலன்விசாரணை செய்தல் என்பதை அரசாங்கம் தொடர்ந்து தவிர்த்து வருகின்றமை மூலம் தமிழ் மக்களின் மனவேதனை மேலும் அதிகரிப்பதாகக் கூறப்படுவதையும் இலகுவில் புறம்தள்ளி விடமுடியாது.
சுயநல செயற்பாடு
இந்திய அரசாங்கம் மிகவும் தயக்கத்துடன் இலங்கை அரசாங்கம்மீது கொடுக்கும் அழுத்தமானது ஒருவகையில் சுயநலமிக்க,தந்திரோபாயமிக்க செயற்பாடாகும். குறிப்பாக, யுத்தத்தின் பின்னர் இலங்கையில் பலமடைந்து செல்லும் சீனாவின் செல்வாக்கினால் தற்போதைய அரசாங்கம் அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பலமடைந்து வருகின்றது.இதனால் இந்தியா தனக்கு இருக்கக்கூடிய சொந்த பொருளாதார நலன்களையும்,அரசியல் செயற்பாடுகளையும் இலங்கையில் இழக்க வேண்டியுள்ளது.
இயல்பிலேயே இந்தியா தனது நாட்டிற்குள்ளிருக்கும் காஷ்மீர் போன்ற பிரதேசங்களில் நிகழும் உள்நாட்டு மோதல்களினால் பலவீனமடைந்துள்ளதுடன், இதனால் ஏற்படக்கூடிய சர்வதேச விசாரணைகளுக்கும் பயப்படுகின்றது. இதன்வழி உலகிலுள்ள ஏனைய அரசாங்கங்களுடன் மிகவும் நெருக்கமாகக் கூட்டிணைந்து செயற்படுவதில் தயக்கம் காட்டுகின்ற மனப்பாங்குள்ளதொரு நாடாக இந்தியாவுள்ளது. இன்று ஒரு எல்லைக்கு அப்பால் சென்று நியாயம் பேசக்கூடிய நிலையில் இந்தியா தன்னைத் தயார்படுத்தவில்லை.அவ்வாறு இந்தியா எல்லை மீறிச் செல்லுமாயின் இந்தியாவின் பலவீனங்களை உலகநாடுகள் கூர்மைப்படுத்தும்,அம்பலப்படுத்தும். எனவே இந்தியா எல்லை கடந்து இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யுமாயின் அதன் பலாபலன்களை அனுபவிக்க வேண்டி வரலாம் என்பது இந்தியாவிற்கு நன்கு தெரியும்.
இந்நிலையிலும் யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் அடிப்படை மாற்றத்தினைக் கொண்டு வருவதற்கு இந்தியா முயற்சிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
இராணுவ வன்முறை மீண்டும் இலங்கையில் தோன்றாமல் தடுக்கவேண்டும்
பலமான இராணுவத்துடனான சர்வாதிகார அரசாங்கம் இலங்கையில் தோற்றம் தடுக்க வேண்டும்.
இந்தியாவின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் சீர்திருத்தம் ஏற்பட நீண்டகாலத்தினை இந்தியா வழங்கிவிட்டது. நீண்டகாலமாக இலங்கையின் அதிகாரப்பரவலாக்கத்திற்கும், சிறுபான்மையோர் உரிமைக்காகவும் தெரிவித்து வந்த ஆதரவின் மூலம் கிடைத்து வந்த மதிப்பினை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும்.
இலங்கை விவகாரத்தில் மத்திய அர சாங்கம் பலமானதொரு செயற்பாட்டினை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கத்தில் அங்கம் பெறுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள் கொடுக்கும் அழுத்தத்தினை கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை காணப் பயன்படும் ஐனநாயகப் பெறுமானங்கள் திறன்வாய்ந்த செயற்பாட்டினால் ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் பெறுவதன் மூலம் பூகோள அதிகாரத்தினைப் பெறமுடியும் என்ற நம்பிக்கைக்கான அங்கீகாரத்தினைத் தேடுதல் வேண்டும்.
மனக்கவலை

இந்தியா நீண்டகாலமாக இலங்கை மீது பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்து வந்துள்ளது. இதன்மூலம் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தினை அடையக்கூடிய கொள்கையினை உருவாக்க வைப்பதே இந்தியாவின் நோக்கம் என இந்தியத் தரப்பிலிருந்து நியாயம் கூறப்பட்டது. ஆனால், இந்தியா எதிர்பார்த்தது போல் நிலைத்திருக்கக்கூடிய சமாதானம் நோக்கி இலங்கையினை வழிநடத்த முடியவில்லை. இதற்கிடையில் என்றுமில்லாதளவிற்கு நிதியுதவியினை இலங்கைக்கு வழங்குவதில் இந்தியா ஆர்வம் காட்டினாலும்,யுத்தத்திற்குப் பின்னரான சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை தோல்வியடைந்தே வருகின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளும், அதிகரித்துவரும் இராணுவத்தின் அரசியல் அதிகாரமும் வன்முறைகள் மீண்டும் இலங்கையில் ஏற்பட்டுவிடுமோ என்ற புதிய மனக்கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளன.
யுத்தத்திற்குப் பின்னரான நியாயமானதும், நிலைத்திருக்கக்கூடியதுமான மீள்குடியேற்றங்களில் இராணுவ மேலாதிக்கத்தினை இலங்கை அரசாங்கம் பிரயோகிப்பதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது.இதற்காக இந்தியா ஐக்கிய அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டியுள்ளதுடன்,இலங்கையின் தற்போதைய கொள்கை ஏற்புடையதல்ல என்பதையும் இந்நாடுகளுக்கு உணர்த்தி வருகின்றது.
இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக சித்தாந்த ரீதியாக இரண்டு பிரதான விடயங்களைக் கருத்தில் எடுக்க வேண்டும். ஒன்று அரசு ஒன்றின் ஆட்சியானது மனித சமுதாயத்திற்கானதாகும். இரண்டாவது ஆட்சியும் மனிட சமுதாயமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகளாகும். துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் தற்கால அனுபவத்தில் இவ் விரட்டைப் பிறவிகள் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்துள்ளதுடன் ஒன்றுடன் ஒன்று ஒத்துவராத வேறுபட்ட கோரிக்கைகளை இரண்டும் முன்வைக்கின்றன.
இங்குள்ள பிரச்சினை யாதெனில் இலங்கையின் சமூக, அரசியல் தேவைகளை விட இந்தியாவின் நலன்கள் முதன்மையானதா என்பதேயாகும். இந்தியாவினைப் பொறுத்தவரை தற்போதைய அரசாங்கம் நீடித்திருக்கவும் வேண்டும். அதேநேரம் தமிழ்ச் சமுதாயமும் நீடித்திருக்க வேண்டும். இந்தியாவின் நலன்கள் இவ்விரண்டிற்கும் இடையிலேயே தரித்து நிற்கின்றன. இந்நிலையில், நீதிக்காக தமிழ் மக்கள் எவ்வளவு காலம் காத்திருக்கப் போகின்றார்கள்?

சிறிலங்கா மீதான அடுத்த நடவடிக்கை – பொங்கலுக்கு முன்னர் அமெரிக்கா முக்கிய முடிவு
தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க உயர்மட்டக் குழு தைப்பொங்கலுக்கு முன்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஜனவரி இரண்டாம் வாரம் இந்தக் குழுவினர் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. றொபேட் ஓ பிளேக்கிற்குப் பதிலாக, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலராக அண்மையில் நியமிக்கப்பட்ட நிஷா தேசாய் பிஸ்வால் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
எனினும், இவரது பயணம் தொடர்பான தகவல்களை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமோ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமோ இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், நிஷா தேசாய் பிஸ்வால் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளார் என்பதை, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு அமைய, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படுள்ள முன்னேற்றங்கள் குறித்து, நிஷா தேசாய் பிஸ்வால் தலைமையிலான குழு மதிப்பீடுகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிசையும் ஏனைய சிறிலங்கா அதிகாரிகளையும் சந்திக்கவும் நிஷா தேசாய் பிஸ்வால் திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் அடிப்படையில், வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், அமெரிக்க காங்கிரசின் உயர்நிலைக் குழுவொன்றும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, ஜெனிவா தீர்மானத்துக்குப் பிந்திய நிலைமைகள் குறித்து மதிப்பீடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா குறித்த நவநீதம்பிள்ளையின் அறிக்கை – ஜெனிவாவில் மார்ச் 26ல் சமர்ப்பிக்கப்படும்
ஜ ஞாயிற்றுக்கிழமை, 29 டிசெம்பர் 2013, 10:37 புஆவு ஸ ஜ தா.அருணாசலம் ஸ
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் மார்ச் 26ம் நாள் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி அட்டவணையில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வு வரும் மார்ச் 3ம் நாள் ஆரம்பமாகி, மார்ச் 28ம் நாள் வரை தொடரவுள்ளது. இதன்போதே, மார்ச் 26ம் நாள் சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதையடுத்து சிறிலங்கா தொடர்பான, விவாதம் நடத்தப்படும் என்றும், தமது கருத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE