பெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்?

740

முதலில் கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கவர்ச்சி என்பது ஆண்களைக் கவரக்கூடியது. இதை ஆங்கிலத்தில் sex appeal என்று கூறுவார்கள். அழகு என்பது அங்க உறுப்புகளின் அளவான தன்மையைப் பொருத்தது. அழகான ஒன்று கவர்ச்சியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைவுதான். பொதுவாக பருவத்தில் எல்லாப் பெண்களுமே அழகு இல்லாதவர்கள்கூட- கவர்ச்சியாகவே இருப்பார்கள். காரணம் இளமை. எல்லாப் பெண்களும் அழகும், கவர்ச்சியும் உடையவர்களாக இருக்கவே ஆசைப்படுவார்கள். ஆகவே, அவர்கள் அழகு சாதனங்கள் மூலம் தன் அழகையும், கவர்ச்சியையும் கூட்ட முடியும் என்று நினைக்கிறார்கள்.

இது உண்மைதான். ஒரு 25 சதம் கவர்ச்சி உள்ள பெண் அழகு சாதனங்கள் மூலம் 75 சதம் கவர்ச்சியாகவும், அழகாகவும் தன்னைக் காட்டிக் கொள்ள முடியும்! ஆகவேதான், பெண்கள், பல தோற்றங்களில் தன்மை அழகுபடுத்திக் காட்டி, ஆண்களைச் சுலபமாகக் கவருகிறார்கள்! ஒரு பெண்ணால், எது இல்லாவிட்டாலும், அழகு சாதனங்கள் இல்லாமல் ஒருக்காலும் இருக்க முடியாது! இன்று உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களும், கன்னிகாஸ்திரீயைப் போல,எந்த அழகு சாதனத்தையும் உபயோகிக்காமல் இருந்தால், உலகத்தில் உள்ள 75 சதம் வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வார்கள்! ஏன், ஜனப் பெருக்கம் கூட சுலபமாகக் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.

why do women prefer makeup even when they are glamorous?

SHARE