பெருந்தொகையான கைகுண்டுகள்,ஆயுதங்கள் மீட்பு

388

தனமல்விலைப் பகுதியின் குமாரகம சந்திக்கருகாமையிலுள்ள காணியொன்றில் மூடப்பட்ட குழியொன்றிலிருந்து வெடிமருந்துகள் கொண்ட பொதியொன்றினை தனமல்விலைப் பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

மூடப்பட்ட குழியொன்றிலிருந்த மீட்ட பொதியில்  டெட்டனேட்டர்கள் ,கைகுண்டுகள் 195 அமோனியம் னைட்டிரேட் 250 கிராம்  பிளக் பவுடர்  50 கிராம், டி. 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் சன்னங்கள் ஐந்து உள்ளிட்டு பெருந்தொகையிலான இரும்புத் தூள்கள் ஆகியன இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிசார் தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை  சம்பவம் குறித்து எவரும் கைது செய்யப்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

SHARE