பேராதனை, கன்னொருவ பகுதியில் நேற்று மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 64, 34 வயதுடைய நபர்கள் எனவும், வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தபோதே மண்மேடு சரிந்து வீழ்ந்து உயிரிழந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.