பொடுகில் இருந்து விடுதலை அளிக்கும் ஹேர் மாஸ்க்

270

வெயிலில் அடிக்கடி போய் வருபவர்கள், வியர்வையினால் பாதிக்கப்படுபவர்கள். தலைக்கு சரியாக குளிக்காதவர்கள், மற்றும் பலவீனமான மயிர்கால்களைப் பெற்றவர்களுக்கெல்லாம் எளிதில் இந்த பூஞ்சைத் தொற்று உண்டாகும் என்று சொல்லப்படுகின்றது.

தற்போது பொடுகில் இருந்து விடுதலை அளிக்கும் ஹேர் மாஸ்க்கை எப்படி போடுவதென்று காண்போம்.

தேவையானவை

எலுமிச்சை – 1 டீஸ்பூன்
தயிர் – அரைக் கப்
டீ-ட்ரீ எண்ணெயில் 3-4 துளிகள்

செய்முறை

முதலில் 1/2 கப் தயிரை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பலரும் தேன் முடியை வெள்ளையாக்கும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் தேன் மயிர்கால்களுக்கு ஈரப்பதமூட்டி, முடியை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

பின்பு அத்துடன் 3-4 துளிகள் டீ-ட்ரீ எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

டீ-ட்ரீ எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. இது பொடுகை எளிதில் அழித்து விரட்டும்.

பின் தலைமுடியை சீப்பால் சீவி, சிக்கு எடுத்துவிட வேண்டும். ஒருவேளை தலைமுடி மிகவும் வறட்சியுடன் இருந்தால், தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவ வேண்டும்.

பின்பு கலந்து வைத்துள்ள கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவ வேண்டும். 1 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு நன்கு தலைமுடியை அலச வேண்டும்.

குறிப்பு

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை தலைக்கு போட்டு வந்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கி, தலைமுடி ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும்.

SHARE