சிறுபான்மை மக்களை மூன்றாம் தரப் பிரஜைகளாக நடாத்தும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா? முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானிக்க வேண்டியது அவசியம்..
பொதுபல சேனா இயக்கத்திற்கு அரசாங்கNமு ஆதரவளி;க்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பௌத்த மதத்திற்கு களங்கம் விளைவிக்க சர்வதேச சக்திகள் பொதுபல சேனா இயக்கத்தை பயன்படுத்தி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சிக்குள் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் பொதுபல சேனாவை தூண்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பொதுபல சேனாவை தூண்டி விடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் மிக முக்கியமானவர்கள் பொதுபல சேனாவிற்கு பக்கபலமாக செயற்பட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுபல சேனா மற்றும் ஏனைய கடும்போக்குடைய இயக்கங்கள் உள்நாட்டில் உருவானவை எனவும் சர்வதேச சக்திகளுக்கு தொடர்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை மக்களை மூன்றாம் தரப் பிரஜைகளாக நடாத்தும் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதனை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.