“பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர்” மன்னார் மாவட்ட பேராயர் இராயப்பு ஜோசப்

828

 

images (8)
பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர் என்றும் சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.
மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போதும் இலங்கையில் நடக்கும் விடயங்களே நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு விருப்பமில்லை. இருட்டுக்குள் செய்யும் காரியங்களையே செய்கின்றனர். மெய்யை சொல்வதற்கு அற்பமேனும் சக்கதி அவர்களுக்கு வரவில்லை. இவ்வாறு இருட்டுக்குள் இருக்கும் மனிதர்கள் கைகளால் தடவிக்கொண்டே இருப்பார்கள். வெளிச்சம் இருக்குமாக இருந்தாலே முன்னேறலாம். ஆகவே இந்த நாடு முன்னேற வேண்டுமாக இருந்தால் சர்வதேச விசாரணை இன்றியமையாததாகும்.
      ஆனால் ஆட்சியாளர்கள் இருட்டுக்குள் இருந்துகொண்டே ஆட்சிபுரிய நினைக்கின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தில் உங்களை இருட்டுக்குள் வைத்துள்ளனர். நீங்கள் வெளிச்சத்திற்கு வந்தாலே நாட்டை முன்னேற்ற முடியும். புதிய பாதையில் கொண்டு செல்ல முயும் என நான் தெரிவித்திருந்தேன். இதற்கான நியாயத்தையும் நான் காட்டியே எழுதியுள்ளேன். ஆனாலும் இன்னும் அதே இருட்டிலேயே அவர்கள் தற்போதும் இருக்கின்றார்கள். அவ்வாறே மக்களை ஆழலாம் எனவும் எண்ணுவதுடன் மக்களை பொய்மையில் அழைத்து சென்று தென்னிலங்கை மக்களை அறியாமையில் வைத்துள்ளனர்.
141106164752_rayappu_joseph_gotabaya_rajapakse_lanka_gotabaya_sri_lanka_mullikulam_640x360_bbc
அங்கு வரும் அரசாங்கத்திற்கு சார்பான பத்திரிகைகள் எல்லாம் பொய்களையே சொல்கின்றன. இதன் காரணமாக தென்னிலங்கை மக்கள் எல்லாம் ஏமாற்றப்பட்டவர்களாக உண்மை என்றால் என்ன என்று தெரியாமல் இருட்டுக்குள் இருந்து தடவிக் கொண்டிருக்கின்றார்களே ஓழிய இந்த நாட்டை முன்னேற்றவோ வழிநடத்தவோ முடியாமல் உள்ளது. இதனால் தான் இத்தனை பிரச்சனைகளும் நம்மிடத்தில் உள்ளது. ஆகவே தான் பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான சர்வதேச விசாரணை தேவை என அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
எனினும் சர்வதேச மேற்பார்வையோடு விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற அர்த்தத்திலேயே தற்போது எம் முன்னால் வைக்கப்படவுள்ள ஜெனீவா பிரேரணை அவ்வாறே அமைந்து விடுகின்றது. ஆயினும் இது போதாது. இது எங்களுக்கு தேவையும் இல்லை.
யாரை வைத்தாலும் இவர்கள் அவ்வாறே போவதற்கு விரும்புவார்கள். சர்வதேச ரீதியாக ஒருவர் வந்து இவ்வாறு நடத்துங்கள் இவ்வாறு நடத்துங்கள் என்று கூறினாலும் அவர்களையும் தம் வசப்படுத்த வல்லமையுள்ளவர்கள். ஆகவே இதில் என்ன முடிவு வரும் என எனக்கு தெரியாது. ஆனால் எல்லோரும் சொல்கின்றார்கள் கொஞ்சம் நன்மை உள்ளது என. ஆனால் கொஞ்ச நன்மை எமக்கு போதாது. ஏன் நாம் கொஞ்சம் கொஞ்சமாக நன்மையை பெற வேண்டும். நாம் முழு நன்மையை பெறுவற்கும் வழி உள்ளது தானே. ஆகவே அந்த வழியை நாம் கடைப்பிடித்தால் என்ன?. அவ்வாறான தைரியம் சர்வதேசத்திற்கு தேவை. அதேபோல் இந்த நாடும் திருந்துவதற்கு அதுவே ஒரேயோரு வழியாகவும் உள்ளது.
ஆகவேதான் போர்க்காலத்தில் நடைபெற்ற சர்வதேச போர் குற்றங்கள் என சொல்லப்பட்ட குறிப்பாக கொத்துக்குண்டுகள், இரசாயன குண்டுகளை கடைசிநேரத்தில் பயன்படுத்தியுள்ளனர், அத்துடன் ஒரு இடத்தில் வெடித்து பல இடத்திற்கு பரந்து கூடிய தீமைகளை தரக்கூடிய குண்டுகளை பயன்படுத்தியமை எல்லாம் சிறிய அளவான மக்களையும் விடுதலைப்புலிகளையும் கொல்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
 images (12)
ஆனால் அவர்கள் கொன்றது சாதாரண மக்களையே. யுத்த சூனிய பிரதேசத்தில் யாரையும் சுடக்கூடாது ஆனால் சனல் 4 காட்டிய காணொளியில் காட்டியது என்ன. அந்த இடத்தில் தான் அனைத்து குண்டுகளும் போடப்பட்டன. அப்போது மக்கள் படும் பாட்டை பார்க்க முடிகின்றது.
அதனை பார்த்தால் இவ்வாறு செய்வர்கள் மனிதர்கள் தானா என கண்ணீர் விட வேண்டியுள்ளது. இக் காணொளியை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார் இரசாயன குண்டுகளை இராணுவம் பாவித்தது என்று நீங்கள் சொன்னீர்களா? இவ் விடயமாக கொழும்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றார். ஓம் நான் சொன்னேன் என்று உடன் கூறினேன். அத்துடன் நிரூபிக்க தெரியும் என்றும் கூறினேன்.
அது மட்டுமல்ல அவர்கள் செய்து அனைத்து காரியங்களும் சர்வதேச சட்டங்களுக்கு மாறானதாகவும் போர் குற்றங்களாகவும் செய்து குவித்தார்கள்.
இறுதிவரை அங்கு மருத்துவர்கள் தங்கியிருந்து மக்களுக்காக பணி செய்தார்கள். நல்ல மனிதர்கள் அவர்கள். அந் நிலையில் அவர்கள் இங்கு வந்தவுடன் என்ன நடந்தது என்று எமக்கு தெரியும். யுத்தம் இடம்பெற்ற இடத்தில் மருந்து இருக்கவில்லை. உண்பதற்கு உணவு இருக்கவில்லை. இவ்வாறான நிலையில் உணவையும் மருந்தையும் போர் ஆயுதமாக அவர்கள் பாவித்தார்கள்.
இங்கிருந்த வெளிநாட்டு தூதுவர்கள் இதனை கேட்டும் கண்ணை மூடிக்கொண்டே இருந்தார்கள். ஏனெனில் அரசாங்கம் தாம் செய்வதெல்லாவற்றையும் அதிகளவாக பிரசாரம் செய்தவுடன் தமிழர்கள் எல்லாம் தற்போது பொய் செல்வார்கள் என எண்ணி அவர்கள் கண்மூடித்தனமாக இருந்ததை நான் அறிவேன்.
இந்திய தூதுவரிடம் நாம் கேட்டிருந்தோம். ஏன் எம்மை கைவிடுகின்றீர்கள். நம் தாய் நாடு இந்தியாவாக உள்ளது. அங்கிருந்தே நம் முன்னோர் இங்கு வந்தனர். அவ்வாறு இருக்கும் போது தாய்குரிய பாசத்தையொல்வா நீங்கள் விடுதலைப்புலிகள் மீதும் காட்டவேண்டும். விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களை மன்னித்து அவர்களை ஏற்க உங்களால் முடியாதா. உங்கள் தாய்குரிய பண்பை வெளிக்காட்ட முடியாதா என கேட்டோம்.
அப்போதும் இந்திய தூதுவர் இந்த கதையெல்லாவற்றையும் நாம் எடுக்க முடியாது. செய்வதையே செய்வோம். ஆனால் அதிகளாவன மக்கள் இறக்க விடமாட்டோம் அத்துடன் உணவை போர் ஆயுதமாக பாவிக்க விடமாட்டோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் இது இரண்டுமேதான் நடந்தது. ஆனால் அவர்கள் வாயை மூடி இருந்தனர்.
 images (10)
இது மட்டுமல்ல நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி முடிவை நாம் அறிவோம். மறுநாளே தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் கைகளையெல்லாம் உயர்த்தியவாறு வெள்ளைக்கொடியை ஏந்தியவாறு ஐநாவின் உத்திரவிற்கு அமைய ஒன்றும் செய்யமாட்டோம் வர சொல்லுங்கள் என்றனர். ஆனால் அவர்கள் அதிலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள். அதேபோலவே பாலச்சந்திரன் என்ற பிரபாகரனின் மகனுக்கு பிஸ்கேட்டை கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றார்கள். எத்தனையோ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைந்த போது கண்ணால் கண்டவர்கள் உள்ள நிலையில் சரணடைந்தவர்கள் தற்போது இல்லை.
ஆகவே இவ்வாறு சரணடைந்தவர்களை இவ்வாறு கொலை செய்வது உலகத்தை அழிக்கும் போர் குற்றமாகும். அதேபோல் காணாமல் போனோர் பட்டியலில் சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். நல்லதொரு சொல்லு எல்லாவற்றுக்கும் காணாமல் போனோர் பட்டியல்.
இவ்வாறு இருக்கையில் மகிந்த சமரசிங்க சொல்கின்றார் நாம் ஒரு பொது மகனும் கொல்லப்படாமல் போரை முடித்துள்ளோம் என்று. இதனைப்போல் மனிதன் வாயை திறந்து சொல்வான என பாருங்கள். சாத்தானை விடவும் பெரிய சாத்தான் கூட சொல்லமாட்டான். அந்த அளவிற்கு பொய் கூறுகின்றார்கள்.
இதே அமைச்சர் கடந்த வருடம் ஜெனீவாவில் சொல்லியிருந்தார் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 92 வீதமானவற்றை நாம் நிறைவேற்றி விட்டோம் என்று  ஆனால் அரை வீதம் கூட செய்யவில்லை.
ஆகவே இவ்வாறான பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர். எனவே நாம் இவ்வாறானவர்களை நம்பி உண்மையை கண்டு பிடிப்பர்கள் என இருந்து விட முடியாது. ஆகவேதான் சர்வதேச விசாரணை எமக்கு தேவை என தெரிவித்தார்.
THINAPPUYAL NEWS
SHARE