பொருளாதாரத் தடை ஆபத்தில் இலங்கை

721
MagindaBros

இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என பிரித்தானியாவின் சிங்களப் பேரவைத் தலைவர் டக்ளஸ் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக பொரளாதாரத் தடைகளை விதிக்கும் முனைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் பிரித்தானிய அரசாஙகத்தை கோரத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களை கொள்வனவு செய்வதனை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பிரித்தானியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை காரணம் காட்டி , இவ்வாறு பொருட்களை நிராகரிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இலங்கை பிரித்தானியாவிற்கு அதிகளவான பொருட்களை ஏற்றுமதி செய்கி;ன்றது.

தேயிலை, சைக்கிள், ஆடைகள், மீன், மாணிக்கக்கல், தும்பு உற்பத்திகள், நகைகள், விளையாட்டுப் பொருட்கள், பழங்கள் மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

2015ம் ஆண்டில் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பதில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தலில் பிரித்தானிய தமிழர்களின் வாக்குகள் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களைப் போன்ற உயர்ஸ்தானிராலய அதிகாரிகள் புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து செயற்படுவதில்லை எனவும், இதனால் புலி ஆதரவாளர்கள் புலம்பெயர் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

SHARE