பொலிசாருக்கே பாதுகாப்பில்லை! சோதனைச் சாவடியை தூக்கிச்சென்ற திருடர்கள்!

506

கொழும்பை அண்மித்த இங்கிரிய பொலிஸ் நிலையத்தின் முன்பாக அமைந்திருந்த சோதனைச் சாவடியை திருடர்கள் தூக்கிச்சென்றுள்ளனர்.

பொலிஸ் நிலையத்துக்கு வருகின்றவர்களை சோதனைக்குட்படுத்துவது, பாதையைக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை முன்னிட்டு இரும்புக் கம்பிகளைக் கொண்டு இந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த சோதனைச் சாவடியை திருடர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளனர்.

பொலிஸ் நிலையம் முன்பாக இருந்த சோதனைச் சாவடி திருடிச் செல்லப்பட்ட சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொலிசாருக்கே பாதுகாப்பில்லாத நிலையில், நமக்குப் பாதுகாப்பு சாத்தியமா என்றும் பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

SHARE