பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்: விமானப்படை வீரர் பலி

77

 

அங்கமுவ பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​சோதனைச் சாவடிக்கு அருகாமையில், உத்தரவை மீறிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அடையாளம்
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 26 வயதுடைய இலங்கை விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

SHARE