பொலிஸ்மா அதிபர் நேர்மையான அதிகாரி என்ற போதிலும் அவரினால் கடமைகளை சுயாதீனமான முறையில் மேற்கொள்ள முடியவில்லை.

549
பொலிஸ் திணைக்களத்தில் கடுமையான அரசியல் தலையீடுகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் நேர்மையான அதிகாரி என்ற போதிலும் அவரினால் கடமைகளை சுயாதீனமான முறையில் மேற்கொள்ள முடியவில்லை.

ஆளும் கட்சியினர் தேவையற்ற விதத்தில் தலையீடு செய்கின்றனர்.

பொலிஸ் திணைக்களத்தின் நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் உள்ளிட்ட சகல நிர்வாக நடவடிக்கைகளும் அமைச்சு செயலாளரின் தேவைக்கு ஏற்ற வகையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய தேர்தல் ஒன்றை கருத்திற் கொண்டு அரசாங்கம் ஐந்து பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் சேவைக் காலத்தை நீடித்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளன.

அரசியல் ரீதியாக தமக்கு தேவையான வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை வழிநடத்துவதே இந்த பதவி உயர்வுகளின் நோக்கமாகும்.

எதிர்காலத் தேர்தல்களின் போது ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும் ஆச்சரியமடைவதற்கில்லை.

அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்தை அரசியல்மயப்படுத்தியுள்ளது.

சுயாதீனமான முறையில் தேர்தல்களை நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஊவா மாகாணசபைத் தேர்தல்களின்போது பொலிஸாரைப் அரசாங்கம் அடக்குமுறைகளை பிரயோகித்தது.

வெல்லாவாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆளும் கட்சியின் தேவைக்கு ஏற்பவே நியமிக்கப்பட்டிருந்தார்.

புலிகளின் சார்பில் ஆவணங்களை தயாரித்தமை உள்ளிட்ட இரண்டு பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவரே இந்த வெல்லவாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: ஜே.வி.பி.

ஜனாதிபதி தோ்தல் தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என ஜே.வி.பி. கட்சி அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு குறித்து, சிங்கள பத்திரிகையொன்று கட்சியின் பொதுச் செயலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுவரையில் கட்சி எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் அமைப்பிற்கு அமைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மூன்றாம் தடவைக்காக போட்டியிட முடியாது.

அரசியல் அமைப்பிற்கும் நாட்டின் அடிப்படைச் சட்டத்திற்கும் முரணான வகையில் அரசாங்கம் தேர்தல் நடாத்தவுள்ளது. எனவே உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலானது சட்டவிரோதமானதாகும்.

அரசாங்கத்தின் சட்டவிரோத முயற்சி குறித்து நாட்டு மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாடு தழுவிய ரீதியில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 

SHARE