பொலிஸ் அதிகாரிக்கு யாழ்ப்பாணத்தில் திடீர் இடமாற்றம்! ஜே.வி.பி ஊழல் ஆரம்பமா?

15

 

 

 

பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என்று அறியப்பட்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் (SCIB) பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் குணறோயனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான இணைப்பு பிரிவுக்கு பொறுப்பதிரியாக இடமாற்றப்பட்டுள்ளது. சார்ஜனட் தர பொலிஸ் அதிகாரிக்கு வழங்கும் பதவிநிலையை நியமிக்கும் பதவியே வழங்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சிலரின் பொலிஸ் மேலிடத்துக்கான மனுக்கள், பொலிஸின் மாவட்ட நிலை நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த வழங்கப்பட்டுள்ளது.

சுன்னாகத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் குணறோயன் காணி மோசடிகள், பண மோசடிகள் உள்ளிட்ட வழக்குகளை துரிதமாகவும் நிரூபிக்க கூடிய வகையில் முன்னேடுத்து வந்து நீதிமன்றின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை ப் பெற்றுக்கொடுத்தார் என்று பலராலும் பாராட்டுப்பெற்றவர்.

 
தென்னிலங்கை அரசியல்வாதிகளின் செல்வாக்குமிக்க மோசடிக் கும்பல்கள், யாழ்ப்பாணத்தில் காணி மோசடிக்கு உடைந்தையாக இருந்த சட்டத்தரணிகள் போன்ற பலம்பெற்ற தரப்புகளுக்கு எதிராக துணிச்சலாக விசாரணைகளை அவர் முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE