பொலிஸ் அதிபர் தமிழரான வி இந்திரனுக்கு ஞானசார தேரர் 12 மணிநேர காலக்கெடுவின் பேரில் தாம் தமக்கு தாமே தீமூட்டி கொள்ளப் போவதாக அச்சுறுத்தினார்.-பொதுபலசேனாவினர் விடுதலை!

460
ஞானசார தேரரரின் தற்கொலை அச்சுறுத்தல் காரணமாக பொதுபலசேனாவினர் விடுதலை!
அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனாவின் 13 உறுப்பினர்களின் விடுதலைக்கு பின்னால் ஞானசார தேரரின் தற்கொலை அச்சுறுத்தல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் களுத்துறை மாவட்ட உதவி பொலிஸ் அதிபர் தமிழரான வி இந்திரனுக்கும் இந்த விடயத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளம் வெளியிட்ட செய்தி ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

அளுத்கம வன்முறையின் போது இலங்கையின் பொலிஸ் மா அதிபர் என் கே இலங்கக்கோன், களுத்துறை உதவி பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கு வன்முறைகளை தடுக்க முழு அதிகாரத்தை வழங்கினார்.

இதனையடுத்து இந்திரன் சம்பவ இடங்களுக்கு சென்று பொதுபலசேனாவின் 13பேரை கைதுசெய்தார்.

இதனையடுத்து பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர், குறித்த 13பேரையும் விடுதலை செய்யுமாறு அழுத்தங்களை வழங்கிய போதும் அதனை இந்திரன் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தநிலையிலேயே ஞானசார தேரர் 12 மணிநேர காலக்கெடுவின் பேரில் தாம் தமக்கு தாமே தீமூட்டி கொள்ளப் போவதாக அச்சுறுத்தினார்.

இதனையடுத்து உயர்மட்ட அழுத்தங்களின் அடிப்படையில் 13பேரும் விடுவிக்கப்பட்டனர்

இதேவேளை அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய இடங்களுக்கு பொறுப்பாக இருந்த இந்திரனிடம் இருந்து அந்த இடங்கள் அகற்றப்பட்டு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிபர் தமிழரான வி இந்திரனுக்கு ஞானசார தேரர்   12 மணிநேர காலக்கெடுவின் பேரில் தாம் தமக்கு தாமே தீமூட்டி கொள்ளப் போவதாக அச்சுறுத்தினார்.

SHARE