பொலிஸ் சுற்றிவளைப்பு: பெருமளவில் கைப்பற்றப்பட்ட கஞ்சா

117

 

குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் கீழ் 36 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்
யாழ். மாவட்ட (Jaffna) குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று (06.04.2024) அதிகாலை செம்மணி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 18 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர், இன்று அதிகாலை செம்மணி பகுதியில் வானொலி பெட்டியில் வைத்து 3 கிலோகிராம் கஞ்சாவினை கடத்த முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மன்னார் பேசாலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை பதுக்கி வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வானொலி பெட்டியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிளிநொச்சி
கிளிநொச்சி பொன்னாறு பகுதியில் 18 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள போதை ஒழிப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், சான்று பொருட்களும் கிளிநொச்சி பொலிஸ் காவவில் உள்ள நிலையில், இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE