பொல்காவலை மற்றும் களுவாஞ்சிக்குடி வாகன விபத்துக்களில் இருவர் பலி

268

பொல்காவலை மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்காவலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு – குருணாகலை பிரதான வீதியில் குருணாகலை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் எதிரத் திசையில் வந்த முச்சக்கரவண்டியுன் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்தக்காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்தவரும் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி உயிரிழந்தார்.

அவர் கஹபத்வல – மாவத்தகம பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் ஆவார்.

மேலும், களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்;

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்முனை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கில் ஒட்டுனர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

அவர் களுதாவளை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

SHARE