போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களைச் செலுத்திய சாரதிகளுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஒரு இலட்சத்து 86 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றினர் என்ற குற்றச்சாட்டுடன் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதமும், மதுபோதையிலும் ஆவணங்களின்றியும் வாகனங்கள் செலுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுக்களுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு 86 ஆயிரம் ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டது.