போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகும் ஜெயவர்த்தனே

520
சிறுவர்களின் வாழ்வை உயர்த்த எவ்வித போராட்டங்களையும் எதிர்கொள்ள தயார் என இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மஹேல ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.யுனிசெப் நிறுவனத்தினால் இலங்கை சிறுவர்களது உரிமை தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஜெயவர்த்தனே உரையாற்றினார்.

சிறுவர்களின் நலன் குறித்து அவர் கூறுகையில், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக வடகிழக்கில் பல்வேறு இழப்புக்கள் ஏற்பட்டன. அதில் சிறுவர்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டனர்.

யுத்தத்திற்கு பின்னர் வட கிழக்கு பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அறிந்ததோடு அங்கு சிறுவர்களின் வாழ்வை உயர்த்துகின்ற, மாற்றுகின்ற பல்வேறு செயற்பாடுகளை செய்தோம். இது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

சிறுவர்கள் தமது கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகியவற்றை பெறுவதற்கு நாம் என்றும் அவர்களுடன் இணைந்து போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. தொடர்ந்தும் எமது போராட்டங்களை முன்னெடுப்போம்.

நானும், குமார் சங்கக்காராவும், முத்தையா முரளிதரனும் வடக்கிற்கு சென்றதோடு அங்கு டி20 விளையாட்டு போட்டியை ஆரம்பித்து அதில் இளைஞர்களை தமது வாழ்வின் துயரங்களை மறந்து, ஒரு புதிய உலகை நோக்கி பயணிக்க அவர்களுக்கு உதவினோம். அது வெற்றியளித்துள்ளது.

இரண்டு வருடத்திற்கு முன் நாம் அந்த விளையாட்டு போட்டிகளை நடத்தியதோடு வெற்றி பெற்றவர்களை வெளிநாடுகளுக்கும் அழைத்து சென்றோம். அடுத்த வருடம் இங்கு அமைப்போம்.

4 வருடங்களுக்கு முன்னர் தேவையான உபகரணங்கள், உதவிகள் என்று அனைத்தையும் வழங்கினோம். இது கிரிக்கெட்டுக்கு ஒரு புத்துணர்வு மட்டும் அல்ல. எம்மால் செய்ய முடிந்த ஒரு சிறிய அர்ப்பணிப்பு என்று கருதுகிறேன்.

நானும் சங்கக்காராவும் தொடர்ந்து இதனை தொடர்ந்து செய்வோம். சிறுவர்களின் உரிமைகளை பெறுவதில் எமது பணி தொடரும் என்று கூறியுள்ளார்.

பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கை நடத்தும் நியூசிலாந்து வீரர்!

SHARE