போராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை

29

 

தேசியத் தலைவரின் சிந்தனைகள்

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்

  • வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன்!
  • ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்!
  • அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழனை ஆர்ப்பரித்துதெழுந்து படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன்.
  • தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் வென்றெழுந்த தமிழனாய். தமிழனை அழவைத்தோரையெல்லாம் கதறவைத்த வீர யுகமொன்றின் சிருஷ்டிகர்த்தா.
  • தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போரட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று, அதன் உந்துவிசையாக இயங்கி, வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போட வைக்கும் பெருந்தலைவன்.
  • குறுகிய ஒரு காலத்திற்கு முன்னால் சிறிய ஆயுதக் குழுவொன்றின் கெரில்லாத் தலைவனாக மட்டுமே இனங்காணப்பட்ட பிரபாகரன் இன்று தொன்மையும் செழுமையும் வாய்ந்த பழம் பெரும் பாரம்பரியங்கள் மிக்க இனமொன்றின் தேசியத் தலைவராக உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மாமனிதன்.
  • தமிழன் அடிபட்டு, தமிழன் துன்புற்று, தமிழன் அலைந்தோடி, தமிழன் கண்ணீர் சிந்திக் கிடந்த ஒரு காலகட்டத்தில் இனப்பற்று மிகுந்த ஒரு புரட்சி வீரனாக ஆயுதம் ஏந்திய பிரபாகரன் – வீழாத படையாகத் தமிழன் அணிதிரண்டு, ஓயாத புயலாகப் பகையைச் சுழன்றடித்து, சாயாத மலையாக நிமிரும் வரலாற்று அதிசயத்தைக் கண்முன்னால் நிகழ்த்திய பெருந்தலைவன்.
  • தனியொரு மனிதனாய் நின்று தமிழீழத் தேசியத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பி தமிழர்களையே வியக்க வைத்த பெரும் வீரன்.
  • குலையாத கட்டுப்பாடும் வழுவாத நேர்மையும், தமிழனின் வாழ்வு நெறி பிறழாத ஒழுக்கமும், சளையாத போர்த்திறனும் இளகாத வீரமும், யாரும் நினையாத வகையான எவரும் மிகையாக நேசிக்கும் உயிரை இயல்பாகத் தூக்கி எறியும் கலையாத தேசப்பற்றும், சுகந்திரத்தில் தணியாத தாகமும் கொண்டோராக ஆயிரமாயிரம் இளையோரை வளர்த்தெடுத்து தளராத துணிவான தேசத்தின் பலமான படையொன்றை உருவாக்கி, உலகில் எவருமே புரியாத விதமாக ஒரு பெரும் சாதனை படைத்த தளபதி.
  • பிரபாகரன் என்றால் தமிழர்களின் ‘ஆன்மா’ என்று பொருள். தமிழர்களின் ‘வாழ்வு’ என்று பொருள். தமிழர்களின் ‘கீர்த்தி’என்று பொருள்.
  • அவர் ஒரு அற்புதமான மனிதர். அபூர்வமான மனிதர். ஆச்சரியமான பல தன்மைகளாலும், பண்புகளாலும் குணவியல்புகளாலும் நிறைந்திருக்கும் அதிசயப்பிறவி.
  • அபரிமிதமான ஆற்றல்கள் மிக்க தனது அழகான ஆளுமையால் முழுத்தேசத்தையுமே ஆகர்சித்து நிற்கும் அசாதாரண தலைவர்.
  • தத்தமது தேசங்களிற்கும் இனங்களிற்கும் தங்களது பெயர்களினால் பெருமையினைத் தேடித்தந்த உலக சரித்திரத்தின் தலைசிறந்த் மனிதர்களின் வரிசையில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது. பிரபாகரன் என்ற பெயர் தமிழீழத்திற்கும், தமிழினத்துக்கும் ஓர் அழியாத புகழ்! என்றும் கிடையாத தலைநிமிர்வு.
  • தமிழர்களின் சேவகனாகி தமிழர்களின் தொண்டனாகி, தமிழர்களின் தளபதியாகி, தமிழர்களின் தலைவனாகி, தமிழர்களின் பலமாகி, தமிழர்களின் கவசமாகி, தமிழர்களின் மணிமகுடமாகி… அடக்கி ஒடுக்கப்பட்டு முடங்கிச் சருண்டு கிடக்கும் உலகத் தேசிய இனங்களுக்கு உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி… பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும் ஒரு பெயராகிவிட்டது பிரபாகரன்!

தேசியத் தலைவரின் சிந்தனைகள்..

  • இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
  • பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன் தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.
  • நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது.
  • மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.
  • நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே. செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.
  • ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்;னதமானது எமது உரிமை, எமது சுகந்திரம், எமது கௌரவம்.
  • நாம் அரசியல்வாதிகளல்லர். நாம் புரட்சிவாதிகள்
  • நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
  • சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.
  • விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். மக்கள் தான் புலிகள்.
  • எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
  • அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரி;யும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.
  • குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி தன்மானத்துடன் வாழவைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.
  • உலகில் எல்லா விடுதலைப் போரட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெரிப்பில் குளிப்பது பொதுசனங்களே.
  • உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கிறது. தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது.
  • நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படைத்திருக்கின்றோம் என்பதன் அடையாளச்சின்னம் தான் ‘சயனைட்” இந்த ‘சயனைட்” எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.
  • பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.
  • ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனபுறுதியும், வீரமும் வீடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.
  • நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.
  • எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்;றியே தங்கியிருக்கின்றது. அசுர பலங்கொண்ட ‘கோலியாத’;தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்.
  • போராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.
  • அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது.
  • இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போரட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேண். எமது போரட்டத்தில் இந்திய இராணுவம் தலையீடு செய்தது ஒரு இருண்ட அத்தியாயம் என்றே சொல்லவேண்டும்.
  • எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.
  • சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.
  • ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.
  • சதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது
  • தனது மனவுலக் ஆசைகளிலிருந்துமு; அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும்.
  • மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.
  • பூரண அரசியற் தெளிவும் விழிப்புணர்வும் ஒரு போராளிக்கு அவசியமானவை.
  • மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.
  • எமக்கு ஒரு நாடு வேண்டும் எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும் எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும். என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.
  • விடுதலைப் போரட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நி;யப்படுவது மக்களிலிருந்தும வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.
  • எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசி;த்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.
  • சத்தியத்திற்காகச் சாகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் சுதந்திர சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.
  • மக்களின் துன்பங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளும் போதுதான் மக்கள் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.
  • எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாமுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழி;ப்பாக இருக்க வேண்டும்.
  • மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம உன்னதம் பெறுகின்றது.
  • இன்றைய உலக ஒழுங்கை பலம்தான் நிர்ணயிக்கிறது.
  • பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.
  • கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.
  • சுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம் பொருளாதார வாழ்வில் தன் சொந்தக் கால்களில் நிற்கவேண்டும். அத்தகைய இனத்தால் தான் சுகந்திரத்தை அனுபவிக்க இயலுமென்பது நியதியாகும்.
  • ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்;றது.
  • மனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கின்றது. அது மனிதப் பிறவிகளுக்கும் பொதுவானது.
  • எதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்
  • இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.
  • இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம்.
  • இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.
  • கெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போரட்ட வடிவம்.
  • இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போரட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.
  • தொடரான பூகோள நிலப்பரப்பையும் வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் கொண்ட வட-கிழக்கு மாகாணங்கள் அடங்கிய மாநிலத்தையே தமிழர் தாயகம் எனக் குறிப்பிடுகின்றோம். இந்த மாநிலம் வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற தமிழ்பேசும் மக்களின் குடிநிலமாகும். இதனைப் பிரித்துக் கூறுபோட முடியாது.
  • கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் தூண்டவோண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்;வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்;க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.
  • இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில், வெற்றி தோல்வி என்ற பிரச்சனைபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர் கொள்ளும் உறுதியும் துணிவும் எம்மிடம் உணட்டா என்பதுபற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைளையும் விட்டுக்கொடுப்பதில்லை.
  • இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான ஓர் இராணுவ ஒப்பந்தம். தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அதற்குத் தலைமைதாங்கும் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளையும் ஒழித்துக் கட்டுவதுதான் இந்த இராணுவ ஒப்பந்தத்தின் இலட்சியம்.
  • திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெதுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.
  • நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போரளி.
  • அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை. தமிழீழத் தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது.
  • இராணுவ ஆதிக்கத்திற்கும் அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை.
  • நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம்; பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.
  • சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது.
  • எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதி;ய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.
  • போர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்யவேண்டும்.
  • எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.
  • இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான புரட்கரமான படைப்புக்களை சிருஷ்டிக்க வேண்டும். சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமையவேண்டும்.
  • விடுதலைப் போரட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல்பாதை. விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக இயங்குகின்றது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.
  • சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுகந்திரம எனும் சுவர்க்கத்தை நாம் காணமுடியும்.
  • போரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.
  • விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதி;ப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.
  • எனது மக்கள் பற்றியும் எனது தேசம் பற்றியும் எனது இயக்கம் பற்றியும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
  • சுதந்திரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகின்றது.
  • நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரி;ய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.
  • எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞாகளும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.
  • பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.
  • சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை.
  • புவியல் ரீதியாக தமிழீழுத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தி;யவர்களாகி எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக் கத்தைத் தகர்த்து எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து எமது கடலில் நாம் பலம் பெறும்போதுதான் விடுவிக்கப்படும் நலப் பகுதியை நிரந்தரமாக் நிலை நிறுத்திதக் கொள்வதுடன் தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படையையும் விரட்டியடிக்க முடியும்.
  • எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பபோல கல்வியும் எமது போராட்த்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும்.
  • விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.
  • உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன.
  • பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்.
SHARE