போலிக் கடவுச் சீட்டில் பயணித்த இலங்கையர், இந்தியாவில் கைது

613
போலிக் கடவுச் சீட்டில் பயணம் செய்த இலங்கையர் ஒருவரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான குறித்த இலங்கையரின் கடவுச் சீட்டில் தமிழகத்தின் முகவரி இடப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடவுச் சீட்டை பரிசோதனை செய்த போது அது போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர், தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக பொலிஸார் சந்தேக நபரை மாநில நீதவான் ஒருவரிடம் முன்னிலைப்படுத்தியதாகவும், அவரை 12ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இளைஞர் மதுரை சிறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

SHARE