போலியான செய்திகள் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்

242

சம காலத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகரிப்புடன் போலியான செய்திகளும் அதிகரிக்கவே செய்துள்ளன.

இதில் உண்மை போன்று புனையப்பட்டு வெளியாகும் செய்திகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்படுகின்றது.

அத்துடன் உண்மைகளை ஆராய்ந்து வெளியிடக்கூடிய செய்தி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையையும் சில சமயங்களில் இந்த போலி செய்திகள் சிதைத்துவிடுகின்றன.

இதற்கு உதாரணமாக கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது வெளியான போலி செய்திகளை சுட்டிக்காட்டலாம்.

இதன் தாக்கத்தினால் தற்போது கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் போலியான செய்திகளை தடுக்கும் நோக்கில் திட்டங்களை வகுத்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தனித்துவிடப்பட்டதாக உணரும் அல்லது குறிப்பிட்ட ஒரு குழுவிலிருந்து விலக்கப்பட்ட நபர்களே அதிகளவில் போலியான செய்திகளை நம்புவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு வழியில் குறிப்பிடுவதானால் சமூக மாற்றத்திற்கு பழக்கப்படாதவர்களே இவ்வாறான செய்திகளை நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் உள்ள Princeton பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது.

மேலும் இவ்வாறானவர்கள் செய்திகளை தொடர்ச்சியாக தெரிந்துகொள்ளாமல் இருப்பதுடன் அவ்வப்போது செய்திகளைப் படிப்பதும் இவ்வாறு போலியான தகவல்களை நம்புவதற்கு மற்றுமொரு காரணம் என சுடடிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE