பௌத்த மதகுருவிடம் ஆசி பெற்ற தமிழ் இராணுவத்தினர் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

524

இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்டுள்ள தமிழ் வாலிபர்கள் பௌத்த விகாரையொன்றில் வழிபாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவினைச் சேர்ந்த தமிழ் வாலிபர்கள் சிலர் இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளை முடித்து அண்மையில் வெளியேறியிருந்தனர்.

tamil_army-01tamil_army-02tamil_army-03tamil_army-04tamil_army-05tamil_army-06

இவர்களுக்கு சிங்கள மக்களுடனான உறவுகளைக் கட்டியெழுப்புதல் தொடர்பான பயிற்சியின் ஒரு கட்டமாக இராணுவத்தின் ஏற்பாட்டில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பில் நாடாளுமன்றத் தொகுதி, அருங்காட்சியகம், இராணுவ மருத்துவமனை, துறைமுகம் என்பவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன் பின்னர் சிங்கள அதிகாரிகள் தமிழ் இராணுவத்தினரை கங்காராமை விகாரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து கங்காராமையில் நடைபெற்ற பௌத்த வழிபாடுகளில் இந்த தமிழ் இராணுவத்தினர் கலந்துகொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பௌத்த மதகுருவிடம் ஆசி பெற்றுக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தின் போர்க்குற்றவாளிகளில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மேற்கொண்டிருந்தார்

SHARE