நாம் பயன்படுத்தும் பல தொழில்நுட்பத்தினைப் பற்றி விரிவாக தெரியாது. அந்த வரிசையில் ‘Bluetooth’-ம் ஒன்று. பல வருடங்களுக்கு முன்னர் இதனைப் பற்றி நாம் அறிந்திருக்கவே முடியாது.
Bluetooth பயன்பட்டினை மட்டுமே நாம் அறிந்து வைத்திருப்போம். ஆனால் அதன் பிண்னணியில் தொழில்நுட்பத்தில் நடப்பதனை பற்றி நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரியாது.
Bluetooth- பெயர்காரணம்
பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கினையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்ட ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன் எனும் மன்னன் பிரிந்து கிடந்த நாட்டினை இணைக்க முயற்சித்தார்.
ஆங்கிலத்தில் ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்று அழைக்கப்பட்டார். பிரிந்த நாடுகளை இணைக்க முயற்சி எடுத்ததால் இணைக்கும் தொழில்நுட்பமான Bluetooth-த்திற்கு இவரின் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
Bluetooth கம்பியில்லாத இணைப்பின் மூலம் PAN(Personal Area Network) எனும் குறுகிய எல்லைக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறது. இதில் 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் குறைந்த அளவுள்ள அலை வரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகிறது.
தகவல் பரிமாறப்படும் முறை
இரு கருவிகள் பாதுக்காப்பான முறையில் இணைக்கப்பட்டப்பின் அனுப்பப்பட்ட தகவலானது சிறிய சிறிய துண்டுகளாக வெட்டப்படுகின்றது. இதனை Packet Based Protocol என்று அழைப்பர்.
அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தகவலானது பரிமாறப்படுகிறது. இதனை ரவுண்ட் ராபின் முறை என்று அழைப்பர்.
ஒரு கருவியில் இருந்து மற்றொரு கருவிக்கு தகவலானது பரிமாறப்படும் போது அதில் மைக்ரோ வினாடிகள் என்ற அளவில் இடைவேளையானது உருவாகிறது.
இதில் தகவல் பரிமாற்றப்படும் எல்லையானது கிளாஸ் 1,2,3 என்று வகைப்படுத்தப்பட்டிள்ளது. இதில் கிளாஸ் 3 என்ற அமைப்பானது வெறும் 5 மீட்டர் தூரத்திற்கே தகவல்களைப் பரிமாறும். 1 வது அமைப்பு சுமார் 100 மீட்டருக்கு செயல்படும்.
தற்போது Bluetooth தொழில்நுட்பமானது மொபைல், கம்ப்யூட்டர், இன்டர்காம் போன்ற பல கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.