ப்ளூட்டோவில் இராட்சத பனிக்கோபுரங்கள்: புகைப்படங்களை வெளியிட்டது நாசா

154

சூரியக் குடும்பத்திலுள்ள பல்வேறு கோள்களையும் நாசா நிறுவனம் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றமை தெரிந்ததே.

இதேபோன்று ப்ளூட்டோ கோளினை கடந்த 2015ம் ஆண்டு முதல் ஆய்வுக்குட்படுத்தி வருகின்றது.

இவ்வாறான நிலையில் அங்கு பனிக்கட்டிகளால் ஆன கோபுரங்கள் போன்ற அமைப்புக்கள் காணப்படுகின்றமைக்கான புகைப்படச்சான்று தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

இக்கோபுரங்களில் சிலது 500 மீற்றர்கள் வரை உயரமானவை என நாசா தெரிவித்துள்ளது.

சூரியக் குடும்பத்தில் காணப்படும் கோள்களுள் பூமிக்கு அடுத்ததாக ப்ளூட்டோவில் இவ்வாறான பனிக்கோபுரங்கள் அல்லது பனி மலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள அனைத்து பனிக் கோபுரங்களும் சூரியன் தோன்றும் திசையில் சரிந்து காணப்படுகின்றமை ஆச்சரியப்பட வைப்பதாக இருக்கின்றது.

இக் கண்டுபிடிப்பினை தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பில் ஆய்வுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE