மகத்துவம் வாய்ந்த புராதன காலத்து பசுவை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!

170

ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப் பூமியிலிருந்து அழிந்துபோன பசு இனம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

Auroch எனும் இப் பசு இனமானது ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் காணப்பட்டது.

இறுதியாக போலந்து நாட்டில் உள்ள Jaktorow வனப்பகுதியில் காணப்பட்ட போதிலும் 1627ம் ஆண்டில் முற்றாக அழிவடைந்துள்ளது.

இப் பசுக்கள் 7 அடி உயரம் வரையில் வளரக்கூடியதாகவும், 1,000 கிலோ கிராம்கள் எடை கொண்டதாகவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இனப் பசுக்களின் DNA ஐ ஆதாரமாகக் கொண்டு கடந்த 2009ம் ஆண்டு முதல் அதே இனப் பசுக்களை தோற்றுவிக்கும் முயற்சியை ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு ஒன்று முன்னெடுத்து வந்துள்ளது.

இக் குழுவானது தற்போது குறித்த முயற்சியில் வெற்றியின் விழிம்பை எட்டியுள்ளதாகவும், விரைவில் இப் பசுக்கள் உருவாக்கப்பட்டுவிடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

SHARE