மகளின் இரண்டாம் திருமணம்.. தாலி கட்டும்போது கண்கலங்கிய தாய்! எமோஷனல் ஆன இயக்குனர் ஷங்கர்

112

 

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மூத்த மகளின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.

பின் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யா ஷங்கருக்கு இரண்டாம் திருமணம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

எமோஷனல் ஆன ஷங்கர்
பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், நயன்தாரா, மோகன்லால், சிரஞ்சீவி, ரன்வீர் சிங், அட்லீ, காஜல் அகர்வால் என இந்திய திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளது. இதில் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு மருமகன் தருண் தாலி கட்டும்பொழுது ஒரு தந்தையாக மிகவும் எமோஷனல் ஆகிவிட்டார் ஷங்கர். அதே போல் ஐஸ்வர்யாவின் தாய்யும் கண்கலங்கிவிட்டார்.

SHARE