மகள் கர்ப்பமாக இருப்பதால் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே மகள் செல்சியா கிளிண்டன் (34).கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மார்க் மெஷ்வின்ஸ்கி என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் செல்சியா தற்போது முதன் முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் கிளிண்டனும் அவரது மனைவி ஹிலாரியும் தாத்தா– பாட்டி ஆக போகும் சந்தோசத்தில் இந்த தகவலை 2 நாட்களுக்கு முன்பு முறைப்படி அறிவித்தனர்.
செல்சியாவுக்கு இந்த அண்டு இறுதியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். |