மகள் வரலக்ஷ்மி நிச்சயதார்த்தம்.. ராதிகா – சரத்குமார் ஜோடியாக தயாராகும் வீடியோ

100

 

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் மும்பையில் நடந்தது. இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவருடன் திருமணம் நிச்சையாக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகும், தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கவுள்ளது என கூறப்படுகிறது.

அதே போல் வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் செய்யப்போகும் நிகோலாய் சச்தேவ் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. அதே போல் அவருக்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறாராம்.

இப்படி ஒரு தகவல் பரவி வந்தாலும், திரையுலகினர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

ராதிகா – சரத்குமார்
இந்த நிலையில் வரலட்சுமியின் நிச்சயதார்த்தத்திற்கு ராதிகா மற்றும் சரத்குமார் தயாராகும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ராதிகாவின் மகள் ரயான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

SHARE