மகுடி வாசிப்பில் மயங்கிய மஸ்தானும், றிசாட்டும்

453

இன்றைய அரசியல் கால நீரோட்டத்தில் சிறுபான்மை இனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வில்லை என்கிற அச்சம் நிலவு கின்றது. இதேநேரம் குறிப்பாக தமிழ் பேசுகின்ற மக்கள் என்கிற வகை யில் முஸ்லீம்கள் தமிழர்களுக்கு அடுத்தபடியாக இந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடக்கூடிய விடயம்.

கடந்த 30 ஆண்டுகால போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை காட்டிக் கொடுத்தார்கள் என்பதனால் முஸ்லீம்கள் விடுதலைப்புலிகளால் இரவோடிரவாக யாழிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அந்த சம்பவத்தின் பின்னர் வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம், திரு கோணமலையில் குடியேறிய முஸ்லீம் மக்கள் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதாவது யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமது இருப்பிடங்களுக்கு மீளவும் வந்து குடியேறினர். எனினும் இவர்களுடன் இணைந்து யாழில் வசித்திராதவர்களும், புத்தளத்தில் வசித்தவர்களும் தமிழ் பகுதிகளில் குடியேறி தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் இப்பிரதேசங்களில் குடியேறிய மக்களுக்கு தன்னை ஒரு இரட்சகராக வெளிப்படுத்தி அரசுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். முஸ்லீம் தரப்பைப் பொறுத்தவரை அவ்வவ்போது ஆட்சியிலிருக்கும் இருக்கும் அரசுடன் இணைந்து செயற்படுவர். தேர்தலில் பிரிந்து போட்டியிட்டாலும் நாம் மஹிந்வை அல்லது மைத்திரிபால சிறி சேன, ரணிலை, சஜித்தை ஆதரிக்கிறோம் என்று இவர்கள் இதுவரை காலமும் நடந்துவந்த விதங்களைப் பார்க்கின்றபோது அவையணைத்தும் அரசியலில் பல விமர்சனங்களைத் தோற்று வித்துள்ளது.

முஸ்லீம்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளை தட்டிக்கேட்கத் துணியாத காதர் மஸ்தான், ஹிஸ்புல்லா, அதாவுல்லா, முஸம்மில் போன்ற முஸ்லீம் பிரதிநிதி கள் அரசாங்கத்தினுடைய வன் முறைகளை புரிந்துகொள்ளாது செயற்படுகிறார்களா அல்லது புரிந்தும் புரியாதவர்களாக செயற்படுகிறார்களா என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது. இதுவரை பல பள்ளிவாசல்கள் உடைக்கப் பட்டிருக்கிறது. முஸ்லீம் மக்களுக்கு எதிராக சிங்களவர்களால் கலவரங்கள் ஏவிவிடப்பட்டன. சிங்கள காடையர்களினால் முஸ்லீம்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு தமிழ் வேட்பாளரை தெரிவுசெய்து அவரை நிறுத்தத் தவறிவிட்டது. அதேபோன்று முஸ்லீம் தரப்பும் தமது தரப்பின் சார்பில் ஒருவரை நியமித்து போட்டியிடத் தவறிவிட்டது. வடக்கில் ஒரு சிவாஜிலிங்கம் கிழக்கில் ஹிஸ்புல்லா என்கிற நிலையே தற்போது தோற்று விக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரச கைக்கூலிகளாக செயற்பட்டு வந்ததே வரலாறு. ஆனால் இன்று காதர் மஸ்தான் அவர்கள் கோத்தபாய அவர்கள் ஊதுகின்ற மகுடிக்கு ஏற்றவாறு நடனம் ஆடுகின்றார். மகுடி வாசித்து முடிந்த பின்னர் பெட்டிக்குள் பாம்புபோல சுருண்டு படுக்கவேண்டிய சூழ்நிலை தான் ஏற்படும். அதேபோன்று தான் ஒருவேளை சஜித் பிரேமதாசா அவர்கள் தோல்வியினை சந்திப் பாராகவிருந்தால் றிசாட் பதியுதீன் அவர்களின் நிலையும் இவ்வாறு தான் அமையும்.

நிபந்தனைகளின் அடிப்படையில் தான் நாம் ஆதரிக்கிறோம் எனக் கூறும் இவர்கள் மக்களுக்கு செய்த அநீதிகளை மறந்து செயற் படுகிறார்கள். ஐ.தே.க 1983-2006 வரை தனது இனப்படுகொலை நாடகங்களை அரங்கேற்றியது. இதில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படு கொலை செய்யப்பட்டனர். பின்னர் மஹிந்த ஆட்சியின் போது ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டனர். நேரடியாகவே மஸ்தான் அவர்கள் கோத்தபாய ராஜபக்சவிற்கும், றிசாட் பதியுதீன் அவர்கள் சஜித் பிரேமதாசாவிற்கும் ஆதரவு தெரிவிக்கின்ற விட யங்களைப் பார்க்கின்றபோது முஸ்லீம் மக்களுக்கிடையில் பிரச்சினைகளை உண்டுபண்ணி பிரித்தாளும் நோக்கில் செயற்படுவதாகவே இதனைப் பார்க்க முடிகிறது.

போர் – சமாதானம் என்கிற காலகட்டத்தில் முஸ்லீம் உளவா ளிகள் பலரும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த வரலாறே இருக்கின்றது. பூகோள அரசி யல் ரீதியாகவும் முஸ்லீம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்கிற போர்வையில் உலகளவில் தாக்குதல்களை நடத்துகின்றனர். இது இவர்களுடைய ஆக்கிர மிப்பினையே எடுத்துக் காட்டு கின்றது. தேசியம், சுயநிர்ணய உரிமை என்கிற விடயத்தினை முதன்மைப்படுத்தி போராடிய ஆயுதக்குழுக்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் மத ரீதியாக ஒரு மனிதனை அடக்கியாளுகின்ற அல்லது மதத்தை திணிக்கின்ற ஒரு செயல் வடிவமானது இலங்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை உதாரணமாக காட்டலாம். இதுவொரு தேர்தல் காலம் என்பதால் குறுகிய காலத்திற்குள் இந்தப் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வைக் கொண்டு வரும் நோக்கில் வேகமாகச் செயற்பட்டது. முஸ்லீம்களுடைய வாக்கு தமக்கு கிடைக்காது என்கிற காரணத்தினாலோ என்னவோ அரசாங்கம் இப்பிரச்சினையை இலகுவாக முடித்துக்கொண்டது.

ஆனால் தமிழ்ப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்கின்றார்கள் என்கிற பெயரில் வடகிழக்கில் 20இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட, இன்னும் வைக்கப்பட்டிருக்கும் வரலாறுகள் கூட உண்டு. எக்காரணத்தைக் கொண்டும் வடகிழக்கில் முஸ்லீம்களின் இனப்பரம்பல் அதிகரிக்கக்கூடாது, இவர்களை அடக்கியாளவேண்டும் என்பதில் கோத்தபாய அவர்கள் தீவி ரமாக உள்ளார். நூற்றுக்கணக்கான முஸ்லீம் புலனாய்வாளர்கள் இன்றும் அரசுடன் இணைந்து பணிபுரிகின்றனர். இவர்கள் ஊஐனுஇ வுஐனு போன்ற இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்புக்குள் இணைந்து செயற்படுகின்றார்கள். இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் சர்வதேச பூகோள ரீதியிலான முஸ்லீம் தீவிர வாதிகளின் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது.

தமிழ் மக்கள் போராடி இதுவரை என்ன தீர்வைப் பெற்றுக்கொண்டார்கள் எனக் கேட்கும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும். அரசியல் தலைமைகள் குரல்கொடுத்து எதைச் சாதித்தார்கள் எனக் கேட்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் மக்களுடைய சாணக்கிய அரசி யலினால் தீர்வை நோக்கிய பயணத்திற்கு ஆயுத ரீதியான போராட்டமே சர்வதேச ரீதியாக தமிழினத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தது. பாரியதொரு கட்டமைப்பை நிலைநிறுத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் சர்வதேச நாடுக ளின் உதவியுடனும், உள்ளுர் அரச கைக்கூலிகளின் உதவி யோடும் தான் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதனால் தான் தேசியம், சுயநிர்ணய உரி மைப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈபிடிபி போன்ற ஆயுதக்கட்சிகளும் உறுதுணையாக செயற்பட்டதுடன் முஸ்லீம் அரசியல் தலைமைகளும் உறுதுணையாக செயற்பட்டனர். ஆனால் இன்று முதலைக்கண்ணீர் வடிப்பதைப் பார்க்கின்ற போது மனம் வேதனையடைகின்றது. முஸ்லீம் அரசியல் தலைமைகளும், தமிழ் அரசியல் தலைமைகளும் அரசின் ஊதுகுழலாக செயற்படுவதென்பது இந்நாட்டில் வாழும் தமிழ் – முஸ்லீம் மக்களுக்கு ஆபத்தாகவே அமையும் எனலாம்.
இன்று இலங்கையில் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. முஸ்லீம் அடிப்படைத் தீவிர வாதிகளின் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சர்வதேச நாடுகளில் இருக்கக்கூடிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது செயற்பாடுகளை மேலும் மேலும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள். வேகமாக வளர்ந்து வருகிறார்கள். இலங்கை நாடானது ஒரு முஸ்லீம் நாடாக மாறவேண்டும் என்கிற நோக்கில் அவர்களது செயற்பாடுகள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வன்னியில் பெரும் பரபரப்பான சூழ்நிலையில் தான் இந்த ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறக் காத்திருக்கிறது. அதுபோன்று கிழக்கிலும் முஸ்லீம் தலைமைகளை அரசியல் அரங்கிலிருந்து அகற்றவேண்டும் என்றும் பலர் இன்று கோத்தபாய ராஜபக்சவை மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரிக்கவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருக் கிறார்கள். இதற்குக் காரணம் இந்த முஸ்லீம் தீவிரவாதம் இந்த நாட்டில் தலைதூக்கியதேயாகும்.
ஆகவே அரச கைக்கூலிகளாக அரசு ஊதுகின்ற மகுடிக்கு ஆடுகின்ற தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ளவேண்டும் அல்லது பாரியதொரு அழிவிலிருந்து சிறுபான்மை இனம் தப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்பதையே இவர்களின் அரசியல் நகர்வுகள் எடுத்துக்காட்டுகின்றது.

(இரணியன்)

SHARE