மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்கவில்லை

571

8bad07b7-83d2-47e4-87be-f2295a01f391_S_secvpf.gif

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வனவிலங்குகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு குறித்த பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற போது உயிரிழந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் பாரியளவில் இயற்கை அழிவு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகளே இதற்கான பிரதான ஏதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.வடக்கின் இயற்கை வளம் தொடர்பில் உரிய அமைச்சுக்களோ அல்லது அரசாங்கமோ கவனம் செலுத்தாமை வருத்தமளிப்பதாக ஸ்ரீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்

SHARE