பொலிஸ் என்றாலே கொடூரமானவர்கள், இரக்கம் இல்லாதவர்கள் என்றே பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. அவர்களிலும் நல்லவர்களளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களாலேயே இந்த உலகம் ஓடி கொண்டிருக்கிறது. தன்னுயிர் பாராது , தன் குடும்பம் பற்றி நினைக்காது , நேரம் காலம் பார்க்காமல் கடமை தவறாத பொலிஸ்காரர்களை நம் வாழ்க்கையில் கேள்விப்பட்டு கொண்டு தான் இருக்கின்றோம்.
அவர்களுக்குள்ளும் இளகிய மனதுண்டு என்பதற்கு சான்று இக்காட்சியாகும். வாத்து குஞ்சு ஒன்று கால்வாய் ஒன்றில் விழுந்துவிட்டதால் தாய் வாத்து தவித்து கொண்டிருந்த தருணத்தில் பொலிசார் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.