பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேற் வில்லியம் ஆகியோரால் மக்களிடம் முக்கிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலினால் முழு உலகமும் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் இக்காலப்பகுதியில், மக்கள் தங்களது மனத்திடத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு குறித்த தம்பதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குறித்த தம்பதிகள், “கடந்த சில வாரங்கள் அனைவருக்குமே சஞ்சலமும், அமைதியற்ற தன்மையும் நிறைந்த வாரங்களாகும்.
இந்நிலையில் நாம் அனைவருமே அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு நேரம் ஒடுக்க வேண்டும். அத்துடன், எமது மனத்திடத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான வழிகள் குறித்து ஆராய வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
மேலும், “தினமும் சிறிய சிறிய முயற்சிகளில் நாம் ஈடுபடுவதன் மூலம், நாம் அனைவரும் எதிர்கொள்ளவுள்ள காலப்பகுதிக்கு தயாராக இருக்க முடியும்” என அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலினால், பிரித்தாயாவில் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இளவரசர் வில்லியம் மற்றும் கேற் வில்லியம் ஆகியோரால் மக்களுக்கு குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.