அதிர்ஷ்ட லாப சீட்டெடுப்பின் மூலம் நாடாளுமன்றம் சென்ற விமல் ரத்நாயக அமைச்சர் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களை விமர்சிப்பதற்கு காரணம் தான் என்ன.
ரஊப் ஹக்கீம் இல்லாத முஸ்லிம் சமூகத்தை இழுவை மாடுகளாக மேய்ப்பதற்கு திரை மறைவில் திட்டங்கள் வகுத்தனர். அதற்காக அவர்கள் மேற்கொண்ட சகல சதிகளையும் இறைவன் சுக்கு நூறாக்கியதுடன் அவர்களுடைய கனவு சாம்ராஜ்ஜியத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தான். இதைத் தாங்கிக் கொள்ளாத இன்றைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஹக்கீம் அவர்கள் சமூகம் சார்ந்த குறைபாடுகள் பற்றியும் ரோஹிணியா முஸ்லிம்கள் நாடு கடத்தப் படக் கூடது என்பது தொடர்பாக சுட்டிக்காட்டி பேசுகின்ற போது பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் போர்க் கொடி தூக்கி கொண்டு இனவாதம் பேசுவதாக குற்றம் சாட்டுவதை நாம் காண்கின்றோம்.
இதன் பிரதிபலனாகத்தான் நேற்று ரோஹினியா முஸ்லிம்கள் தொடர்பாக எமது கட்சியின் தலைவர் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பேசுகின்ற போது அதற்கு இடையூறு விளைவித்து அமைச்சர் விமல் ரத்நாயக்கா அவர்கள் விரல் நீட்டி துவசம் பேசினார் அவர் பேசுகின்ற போது முஸ்லிம்களுடைய கட்சி NPP தான் என்று ஒரு கருத்தை தெரிவித்தார்.
அவர் அவ்வாறு கூறியதன் பின்னோட்டம் தொடர்பாக உற்று நோக்குவமேயானால் அவர்களுடைய npp கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய மணியை தினந்தோறும் அசைத்து ஒலியை நாங்கள்தான் முஸ்லிம்களுடைய பிரதிநிதிகள் என்று கூறுவதனால் அவர் அவ்வாறு கூறுகின்றார். அமைச்சர் அவர்களே நீங்கள் நடத்துகின்ற நாடகம் மிக விரைவில் தோல்வி அடையும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. உங்களுக்கு மணி அடிக்கும் ஒரு சில முஸ்லிம் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு எங்களுடைய சமூகம் சார்ந்த விடயங்களை குழி தோண்டி புதைப்பதற்கு முனையாதீர்கள் அரசியல்வாதிகளுக்குள் விசித்திரமான ஒரு அரசியல்வாதி எங்களுடைய தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்கள் .
மாவட்டம் தாண்டி சென்று வெற்றி வாகை சூடும் வரலாறு படைத்தவர் என்பதனை இலங்கை வரலாறு கூறும்.
அமைச்சர் அவர்களே நீங்கள் மார்பு தட்டி கூறுகின்றீர்களே நாங்கள் தான் முஸ்லிம்களுடைய கட்சி என்று அவ்வாறென்றால் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள முஸ்லிம் நீதிபதிக்கு நியமனம் விளங்காமல் நான்காம் இடத்தில் இருந்த நீதிபதி அவர்களை நியமித்தீர்களே அதற்காக வேண்டி அரசியல் உயர் சபையிலே அங்கம் வகிக்கும் உங்களுடைய மணியை ஆட்டும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முழு ஆதரவுடன் எங்களுடைய சமூகத்தின் அபிலாசைகளை கரையோட செய்து மூடி மறைத்துள்ளீர்களே ஆனால் நாங்கள் மறக்கவில்லை அது மட்டுமா.
42% முஸ்லிம் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் ஆளுநரை நியமிக்க உங்களுக்கு வக்கில்லை . அதற்குள் நீங்கள் எங்களுடைய பிரதிநிதிகள் என்று சாயம் பூசி ஏமாற்ற வருகின்றீர்கள் .
நீங்கள் கூறுவதெல்லாம் பொய் 70,000 ரூபா பெருமதியான புற்று நோய்க்கு எதிரான மருந்தினை 370 ரூபாய்க்கு குறைத்து உள்ளோம் என்று கூறுகின்றீர்கள.
30ரூபாய்
50ரூபாய்க்கு வாங்கிய புளியம்பழம் 2000 ரூபாய் கொடுத்தாலும் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. உங்களுடைய ஆட்சியில். தேங்காய் 230 ரூபாய், அரிசி வாங்குவதற்கு மக்கள் வீதி வீதியாக கடைகளில் தேட வேண்டிய சூழ்நிலை.
உப்பு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் அன்றாட பொருட்கள்,தட்டுப்பாடும் மறுபுறத்தில் மத்திய வங்கி எச்சரிக்கை 5% தொடக்கம் 7% வரை இவ்வாண்டில் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என எச்சரிக்கின்றது.
இவ்வாறு எத்தனையோ விடயங்களை எதிர் நோக்க வேண்டியுள்ள சூழ்நிலையில் நீங்கள் எங்கள் மீதும் எங்கள் சமூகத்தின் குரலாக மூன்று தசாப்தங்களாக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கும் தலைவரை விரல் நீட்டி பேசுவதற்கு உங்களுடைய விரல் தகுமா என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும் அமைச்சர் அவர்களே உங்களுடைய விரல் நீட்டும் சிந்து விளையாட்டை விளையாடுவதற்கு உங்களுடன் கணக்கு தெரியாமலும் சமோசா சாப்பிடுவதில் ஆர்வமுள்ள உங்களுக்கு மணி அடிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை வேகு பார்த்துக் கொள்ளுங்கள்.