மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்.. முன்னணி தமிழ் ஹீரோவை இயக்குகிறார்

90

 

மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தற்போது 100 கோடி ரூபாக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்ப்பு கிடைத்து இருப்பது தான் வசூல் குவிய காரணம்.

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றனர்.

தனுஷை இயக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர்
இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரத்திற்கு அடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். பல தயாரிப்பாளர்கள் அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க காத்திருக்கிறார்களாம்.

நடிகர் தனுஷை இயக்க சொல்லி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் இயக்குனர் சிதம்பரத்தை ஒப்பந்தம் செத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த கூட்டணி உறுதியானால் அந்த படம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என ரசிகர்கள் தற்போதே எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

SHARE