மஞ்சு வாரியர் டைவர்ஸ் நடிகை பாவனா சபாஷ் 

452



நடிகர் திலீப்பை விவாகரத்து செய்யும் விஷயத்தில் மஞ்சுவாரியர் உறுதியான முடிவு எடுத்திருப்பதாக கூறுகிறார் பாவனா.மல்லுவுட் ஸ்டார் தம்பதிகள் திலீப்&மஞ்சுவாரியர் தற்போது விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் பிரிவுக்கு காரணம் மஞ்சுவாரியரின் தோழிகளான பாவனா, கீது மோகன்தாஸ் போன்றவர்கள்தான் என பலர் புகார் கூறி வந்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மஞ்சுவாரியர் சமீபத்தில் தனது இணைய தள பக்கத்தில் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் தனது விவாகரத்து முடிவுக்கு தோழிகள் கீது, பாவனா, பூர்ணிமா மற்றும் சுவேதா மேனன் ஆகியோர் மீது குற்றம் சாட்டுவது சரி அல்ல. அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாவனா சமீபத்தில் அளித்த இணைய தள பேட்டி ஒன்றில், மஞ்சுவின் உறுதியான முடிவை வரவேற்பதாக கூறி இருக்கிறார். அதற்கு தோதாக தோழிகள் 5 பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கலர்புல்லாக வெளியிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் அறிந்து திலீப் கடுப்பாகி உள்ளாராம்

 

SHARE