மடுக்கரை மக்கள் மாற்றுக்காணிகளில் மீளக்குடியமர்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும்! ஆனந்தன் எம்.பி

368

 

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமம், ஒவ்வொரு வருடமும் மாரி மழை காலங்களில் மல்பத்து ஓயா நீர் பெருக்கெடுத்து பாய்வதால் வெள்ளநீரில் முற்றாக மூழ்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5)
இந்த வெள்ள அனர்த்தத்தால் இக்கிராம மக்களின் வீடுகள், உடைமைகள், தோட்டங்கள், கால்நடைகள் பெரும் அழிவுகளை சந்திப்பதுடன், இங்கு வசித்து வரும் மக்களும் இடம்பெயர்ந்து நானாட்டான் மோட்டைக்கடை உள்ளிட்ட பாடசாலைகளில் தஞ்சமடைந்து, மழை ஓய்ந்து வெள்ள நீர் வடிந்த பின்னர் வீடுகளுக்கு திரும்பும் அவலநிலை காணப்படுகின்றது.
வருடாவருடம் சிறுவர்கள், முதியோர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் சகிதம் பாடசாலைகளிலும், பொது கட்டடங்களிலும் தஞ்சமடைந்து இடவசதி பிரச்சினைகளுடனும் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுடனும் அசௌகரியங்களுடன் வாழும் உங்களின் இடர்நிலைமைகளை கவனத்தில் கொண்டு, பிரதேச செயலாளர் உங்களுக்கான மாற்றுக்காணிகளை வழங்கி மீளக்குடியேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
எனவே அவர் எடுக்கும் இத்தகைய நடவடிக்கைக்கு மடுக்கரை கிராம மக்களாகிய நீங்கள் உங்களின் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையையும் நலன்களையும் கவனத்தில் கொண்டு ஒத்துழைப்புகளை வழங்குவது நன்மை தரக்கூடியது. எனவே இவ்விடையம் தொடர்பில் சாதகமான முடிவுகளை பரிசீலிக்க வேண்டும்.
மடுக்கரை கிராமத்தைச்சேர்ந்த 367 மாணவர்களுக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் நிதியிலிருந்து கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, மடுக்கரை பாடசாலையில் 27.03.2015 அன்று நடைபெற்றது. இதன்போதே ஆனந்தன் எம்.பி கிராம மக்களிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் நானாட்டான் பிரதேசசபை உபதவிசாளர் றீகன், உறுப்பினர் விமலநாதன் மதன், கிராம பொதுஅமைப்புகள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
SHARE