மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைத் தேண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியாழ் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

670
  DSC07919 (1)
மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைத் தேண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியாழ் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கல்முனையிலிருந்து கடந்த 1990ம் ஆண்டு காத்தான்குடி நோக்கிச் சென்ற 165 பேர் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதுடன் இவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு புதைக்கப்பட்டவர்களின்சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காத்தான்குடி நகரசபை உறுப்பினர் மஜீத் ஏ றவூப் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 22.4.2014 அன்று முறைப்பாடு செய்தார்.

தனது உறவினர்கள் இருவர் இதில் கடத்திக் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் மஜீத் ஏ றவூப், தமது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தினை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அடையாளப்படுத்தியதாக தெரிவித்தார்.

பொலிஸார் கேட்டுக்கொண்டதற்கிணங்கள எதிர்வரும் முதலாம் திகதி உரிய இடத்தினை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு நீதவான் றியாழ் உத்தரவிட்டார்.

 DSC07919 DSC07846

 

SHARE