மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புகைப்படம் மற்றும் அழிந்த நிலையில் மீனவர் அடையாள அட்டையும் எரிந்த துவாய் மற்றும் சேர்ட் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட எலும்பு மனிதரின் கை எலும்பாக இருக்கலாம் எனவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரியால் விசாரணைகளை மேற்கொண்டார்.
இந்த எலும்புகள் அண்மையில் இப்பகுதியில் மீட்கப்பட்ட மண்டையோட்டின் பகுதியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.