மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை துரிதமாக புனரமைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

204

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (08.05.2019) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மேலும், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை துரிதமாக புனரமைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

அத்தோடு, சேதமடைந்த தேவாலயத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, தேவாலயத்தின் உடனடியாக புனரமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும், இத்துயரச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தின் பிரதம திருத்தந்தை அருட்திரு ரொஷான் மஹேஷன் உள்ளிட்ட பாதிரியார்களுக்கும், கிறிஸ்தவ மக்களுக்கும் ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.

SHARE